தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பட்டியல் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப் பெற்றால், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் வகிக்கும் பதவியிலிருந்து உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், ஆறு ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிடத் தகுதியில்லாதவர் ஆகிவிடுகின்றனர். பதவி இழந்த நபர் மேல் முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்றால் மட்டுமே இழந்த பதவி கிட்டும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்[தொகு]

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முக்கிய நபர்கள் விவரம்:[1]

பிரதிநிதி அரசியல் கட்சி பிரதிநிதித்துவம் & தொகுதி வழக்கு தண்டணை பெற்ற நாள் தற்போதைய நிலை
அப்சல் அன்சாரி பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் உறுப்பினர், காசிபூர் மக்களவைத் தொகுதி 2007 குண்டர் சட்ட வழக்கில் காஜிபூரில் உள்ள மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது 1 மே 2023 தகுதி நீக்கம்[2]
ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரசு மக்கள் உறுப்பினர், வயநாடு 2019ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மோடி சாதியினரை இழிவாக பேசிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை 23 மார்ச் 2023 தகுதி நீக்கம்[3][4]4 ஆகஸ்டு 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.[5]
முகமது பைசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி மக்கள் உறுப்பினர், லட்சத் தீவு கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை 11 சனவரி 2023 தகுதி நீக்கம்
அப்துல்லா ஆசம் கான் சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர், சுவார் சட்டமன்றத் தொகுதி, உ பி அரசு அதிகாரிகளை பணி செய்வதில் தடுத்த வழக்கில் சிறை தண்டனை[6] 13 பிப்ரவரி 2023 தகுதி நீக்கம்[7]
ஆசம் கான் சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர், ராம்பூர் சட்டமன்றத் தொகுதி, உ பி நரேந்திர மோதி மற்றும் யோகி ஆதித்தியநாத் ஆகியோரை அவதூறாகப் பேசிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை 27 அக்டோபர் 2022 தகுதி நீக்கம்
விக்ரம் சிங் சைனி பாஜக சட்டமன்ற உறுப்பினர், கதௌலி சட்டமன்றத் தொகுதி, உ பி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்[8][9][10] 12 அக்டோபர் 2022 தகுதி நீக்கம்
ஜெ. ஜெயலலிதா அதிமுக தமிழக முதலமைச்சர்
சட்டமன்ற உறுப்பினர், ஆர் கே நகர்
சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பிப்ரவரி 2017 மரணம் அடைந்தார்.
கமல் கிஷோர் பகத் அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் சட்டமன்ற உறுப்பினர், லோகர்தகா சட்டமன்றத் தொகுதி, ஜார்கண்ட் கொலை வழக்கில் சிறை தண்டனை சூன் 2015 தகுதி நீக்கம்[11]
சுரேஷ் கணபதி ஹால்வங்கார் பாஜக சட்டமன்ற உறுப்பினர், இச்சல்கரஞ்ஜி சட்டமன்றத் தொகுதி, மகாராட்டிரா மின்சாரத் திருட்டு வழக்கில் 3 ஆண்டு தண்டனை மே 2014 தகுதி நீக்கம்[12]
டி. எம். செல்வகணபதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் சுடுகாட்டு கூரை வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை ஏப்ரல் 2014 பதவி விலகினார்[13]
பபன்ராவ் கோலாப் சிவ சேனா தியோலாலி சட்டமன்ற உறுப்பினர், மகாராட்டிரா சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை மார்ச்சு 2014 தகுதி நீக்கம்[14]
எனோஸ் எக்கா ஜார்கண்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர், கோலேப்பிரா, ஜார்கண்ட் ஆயுள் தண்டனை சிறைவாசம் 2014 தகுதி நீக்கம்[15]
ஆஷா ராணி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், பிஜவார் சட்டமன்றத் தொகுதி, மத்தியப் பிரதேசம் பணிப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்காக தண்டனை நவம்பர் 2013 தகுதி நீக்கம் [16]
ரசீத் மசூத் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர், உ பி மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டில் ஊழலில் 4 ஆண்டு சிறை தண்டனை செப்டம்பர் 2013 பதவி நீக்கம்[17]
லாலு பிரசாத் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம் மக்களவை உறுப்பினர், சரண் தொகுதி, பிகார் கால்நடை தீவன வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை செப்டம்பர் 2013 தகுதி நீக்கம்[18]
ஜெகதீஷ் சர்மா ஐக்கிய ஜனதா தளம் மக்களவை உறுப்பினர், பிகார் கால்நடை தீவன வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை செப்டம்பர் 2013 தகுதி நீக்கம்[18]
பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர், ஒசூர், தமிழ்நாடு கலவரம் & கொலை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை[19] 7 சனவரி 2019 தகுதி நீக்கம்[20]
பப்பு கலானி இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர், உல்லாஸ் நகர், மகாராட்டிரா கொலை வழக்கில் சிறை தண்டனை [21] 2013 தகுதி நீக்கம்
அனில் குமார் சகானி இராச்டிரிய ஜனதா தளம் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ரூபாய் 23.71 இலட்சம் மதிப்புள்ள போலி விமானச் சீட்டுகள் செலுத்தி இந்திய அரசிடம் பயணப்படி பெற்ற வழக்கு அக்டோபர் 2022 சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம்
3 ஆண்டு சிறை தண்டனை
பிரஜ்வல் ரேவண்ணா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், ஹாசன் மக்களவைத் தொகுதி, கர்நாடகா தேர்தல் வேட்பு மனுவில் தவறான சொத்து விவரங்கள் வழங்கியமைக்காக[22][23] 1 செப்டம்பர் 2023 தகுதி நீக்கம்
க. பொன்முடி திமுக திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் & உயர் கல்வி அமைச்சர் வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை[24] 21 டிசம்பர் 2023 சட்டமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம்
3 ஆண்டு சிறை தண்டனை
ரூபாய் 50 இலட்சம் அபராதம்
சுனில் சத்திரபால் கேதார் இந்திய தேசிய காங்கிரசு சவ்னர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நாக்பூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் 125 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு 24 டிசம்பர் 2023 சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம்
5 ஆண்டு சிறை தண்டனை
ரூபாய் 10.5 இலட்சம் அபராதம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
  2. "BSP MP Afzal Ansari loses Lok Sabha seat after conviction in 2007 Gangsters Act case". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-05-01. பார்க்கப்பட்ட நாள் 2023-05-02.
  3. "Rahul Gandhi No Longer An MP After Jail Sentence In 'Modi Surname' Case". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
  4. "Rahul Gandhi disqualified as Lok Sabha MP after conviction, sentencing in defamation case". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
  5. Stay on Rahul Gandhi conviction
  6. Abdullah Azam Loses UP Legislative Assembly Membership After Moradabad Court Convicts Him In a 15-Year-Old Case
  7. "हाईकोर्ट से आजम खान को बड़ा झटका, रद्द की बेटे अब्दुल्ला की विधायकी". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  8. Uttar Pradesh: BJP MLA Vikram Saini disqualified
  9. BJP’s Vikram Saini disqualified after 23 days of conviction
  10. BJP MLA Vikram Saini’s seat declared vacant
  11. "Jharkhand MLA Kamal Kishore Bhagat jailed for 7 years for attempt to murder". The Times of India. 23 June 2015. பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
  12. "No HC relief for disqualified BJP MLA in power theft case". Business Standard. 25 September 2014. http://www.business-standard.com/article/pti-stories/no-hc-relief-for-disqualified-bjp-mla-in-power-theft-case-114092501209_1.html. 
  13. "A day after conviction, DMK leader T M Selvaganapathy resigns from Rajya Sabha". Economic Times. 18 April 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/a-day-after-conviction-dmk-leader-t-m-selvaganapathy-resigns-from-rajya-sabha/articleshow/33913736.cms. 
  14. "Bombay High Court dismisses 5-time Shiv Sena MLA plea for suspension of graft conviction". DNA India. 7 September 2014. http://www.dnaindia.com/mumbai/report-bombay-high-court-dismisses-5-time-shiv-sena-mla-plea-for-suspension-of-graft-conviction-2016488. 
  15. "Convicted Jharkhand MLA Enos Ekka loses Kolebira assemblyseat". பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
  16. "BJP MLA, Bhaiya Raja get 10-yr in jail". The Pioneer. 1 February 2015. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  17. "Convicted Congress MP Rasheed Masood disqualified from Rajya Sabha". The Times of India. 1 January 1970. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
  18. 18.0 18.1 "Fodder scam: Lalu Yadav, Jagdish Sharma disqualified from Lok Sabha". Zee News. 22 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.
  19. 20 ஆண்டு கடந்து அமைச்சர் பதவியை பறித்த தலித் பெண்ணின் கண்ணீர்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கின் தொடக்கப் புள்ளி தி இந்து திசை - 09 Jan 2019
  20. 20 ஆண்டு கடந்து அமைச்சர் பதவியை பறித்த தலித் பெண்ணின் கண்ணீர்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கின் தொடக்கப் புள்ளி தி இந்து திசை - 09 Jan 2019
  21. "Ex-Ulhasnagar-MLA-Pappu-Kalani-3-others-convicted-for-businessmans-murder". The Times of India.
  22. Karnataka High Court disqualifies JD(S) leader Prajwal Revanna as Hassan MP
  23. Hassan JDS MP Prajwal Revanna Disqualified Over False Details in Affidavit
  24. பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார்