லாலு பிரசாத் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லாலு பிரசாத் யாதவ்

2007இல் லாலு பிரசாத் யாதவ்

தொகுதி சரன்
அரசியல் கட்சி இராஷ்டிரிய ஜனதா தளம்

பிறப்பு 11 ஜூன் 1947 (1947-06-11) (அகவை 67)
கோபால்கஞ்ஜ், பீகார்
வாழ்க்கைத்
துணை
ராப்ரி தேவி
பிள்ளைகள் 2 மகன், 7 மகள்கள்
இருப்பிடம் பாட்னா
செப்டம்பர் 25 இன் படியான தகவல், 2006
மூலம்: [1]

லாலு பிரசாத் யாதவ் (இந்தி: लालू प्रसाद यादव, பி. ஜூன் 11, 1947) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி. 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15ஆம் மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவை தொகுதியில் வெற்றியும் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் தோல்வியும் அடைந்தார்.

வழக்கு[தொகு]

1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2013 அன்று லாலு குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியது[1] இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது, இதனால் இவர் மக்களவைதொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார்.[2][3]

தேர்தலில் போட்டியிடும் தகுதி[தொகு]

லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.[4]

மேற்குறிப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லாலு_பிரசாத்_யாதவ்&oldid=1668699" இருந்து மீள்விக்கப்பட்டது