பகுஜன் சமாஜ் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984ல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001 ல் கன்ஷிராம் தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்தார்.

13வது மக்களவையில் (1999-2004) இதற்கு 14 இடங்கள் கிடைத்தது, தற்போதய 14வது மக்களவையில் இதற்கு 19 இடங்கள் உள்ளன. இதன் தலைவராக மாயாவதி உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக தற்போது உள்ளார். இக் கட்சி மற்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசத்தில் பலமாக உள்ளது. 2014ல் நடந்த 16வது மக்களவையில் இக்கட்சி ஒரு இடத்தையும் வெல்லவில்லை.


"http://ta.wikipedia.org/w/index.php?title=பகுஜன்_சமாஜ்_கட்சி&oldid=1664375" இருந்து மீள்விக்கப்பட்டது