தலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மற்றும் தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் தலித் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படுவார்கள். நசுக்கப்பட்ட மக்கள், நொருக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துக்கள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. தலித்துக்கள் இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டும், அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூக பண்பாட்டு நிலையில் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். பல கால தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்.

"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள தீண்டாதோர்க்கும், பழங்குடி மக்களுக்கும் (Schedule Tribes) தலித்துக்கள் என்பது பொதுப் பெயராகும்" என்று அம்போத்கரும் தலித் மனித உரிமை போராட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நிலையில் பிற்பட்ட பிரிவினரும் (Backward Classes), மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பலரும் தங்களை தலித்துக்கள் என்றோ அல்லது தலித்துக்களுடனோ அடையாளப்படுத்துகின்றனர். மேலும் சர்வதேச(பன்னாட்டு) மட்டத்தில் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கும் கறுப்பின, மற்றும் முதற்குடி மக்களையும் தலித்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதுண்டு.

தலித் மக்களின் சமூக பொருளதார நிலை[தொகு]

தலித் மக்களின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயது முடிவதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000: 61.ஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகள் 1,000-ல் 39 இறந்துவிடுகின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.தலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக இருக்கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49%. 2000 ஆண்டு கணக்குப்படி 66% தலித் குடும்பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங்களில் இது 33%.தலித் மக்களில் முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால்வாசியாக உள்ளது. [1]

தலித் பண்பாட்டு அமைப்பு[தொகு]

"இந்திய தலித்துக்களின் பண்பாட்டு அமைப்பானது இந்தியாவின் ஆதிக்க பண்பாட்டின் சமூக ஒழுங்கமைப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் மறுமதிபீடு செய்வதும் இல்லை. மாறாக அது அவ்வாதிக்கப் பண்பாட்டுனைப் போன்றதொரு அமைப்பொழுங்கைத் தனது பண்பாட்டுக்குள்ளும் தொடர்ந்து மறுபடைப்புச் செய்து கொண்டிருக்கின்றது" [2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்திய வறுமையின் உள்கதைகள்". தி இந்து (24 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.
  2. மொஃபாத், 1979:3 - ச. பிலவேந்திரன் அவர்களின் தமிழ்ச் சொல்லாடலும் மானிடவியல் விவாதங்களும்

துணை நூல்கள்[தொகு]

  • சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தலித்&oldid=1528469" இருந்து மீள்விக்கப்பட்டது