ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ மு கூ) தற்பொழுது இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் கூட்டணியாகும் . இக்கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரசின் தலைமையில் ஒருங்கிணைந்த பெரியக் கட்சியாக மக்களவையில் வீற்றிருக்கின்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக மாண்புமிகு திருமன்மோகன் சிங்கும் மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் திருமதி சோனியா காந்தி தலைவராக உள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோன்றிய சில நாட்களில் சந்தித்த 2004, 2009 பொதுத் தேர்தல் களில் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியை தோல்வியுறச் செய்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் , திமுக கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்த்தன் மூலம் ஆட்சி அமைத்து தற்பொழுது வரை தொடர்கின்றனர்.
குறைந்தபட்ச செயல் திட்டம்
இக்கூட்டணி அரசின் செயல் வடிவமாக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப் பட்டு அதன்படி ஆட்சிநடத்தப்பட்டு வருகின்றது.