பாட்டாளி மக்கள் கட்சி
| பாட்டாளி மக்கள் கட்சி | |
|---|---|
| தலைவர் | கோ.க.மணி |
| நிறுவல் | 1989 |
| தலைமையகம் | தைலாபுரம், திண்டிவனம் |
| கூட்டணி | தேசிய ஜனநாயக கூட்டணி (1998-2004) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2004-2009) மூன்றாவது அணி (2009-2010) |
| கொள்கை நிலை | சமூக ஜனநாயகம்/Populist |
| கட்சிக் கொடி | |
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
|
பாட்டாளி மக்கள் கட்சி (பா. ம. க.) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1990களில்,டாக்டர். ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கினார். இதுவரை, இக்கட்சி தமிழ்நாடு சட்ட மன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26,2009 வரை இருந்தது [1]. 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராக இருந்தார்.
ஜூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை(மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது [2][3]
தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[4] [5]. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.
பொருளடக்கம் |
வாக்குகள், தொகுதிகள்[தொகு]
தமிழ்நாடு[தொகு]
| வருடம் | பொதுத் தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் |
|---|---|---|---|
| 1989 | 9வது மக்களவை | 1,536,350 | 0 |
| 1991 | 10வது சட்டசபை | 1,452,982 | 1 |
| 1991 | 10வது மக்களவை | 1,269,690 | 0 |
| 1996 | 11வது சட்டசபை | 1,042,333 | 4 |
| 1996 | 11வது மக்களவை | 552,118 | 0 |
| 1998 | 12வது மக்களவை | 1,548,976 | 4 |
| 1999 | 13வது மக்களவை | 2,236,821 | 5 |
| 2001 | 12வது சட்டசபை | 1,557,500 | 18 |
| 2004 | 14வது மக்களவை | 1,927,367 | 6 |
| 2006 | 13வது சட்டசபை | 1,863,749 | 18 |
| 2009 | 15வது மக்களவை | 1,785,442 | 0 |
புதுச்சேரி[தொகு]
| வருடம் | பொதுத் தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் |
|---|---|---|---|
| 1989 | 9வது மக்களவை | 25,021 | 0 |
| 1991 | 8வது சட்டசபை | 11,402 | 0 |
| 1991 | 10வது மக்களவை | 13,375 | 0 |
| 1996 | 9வது சட்டசபை | 11,544 | 1 |
| 1996 | 11வது மக்களவை | 19,792 | 0 |
| 1999 | 13வது மக்களவை | 140,920 | 0 |
| 2001 | 10வது சட்டசபை | 36,788 | 0 |
| 2004 | 14வது மக்களவை | 241,653 | 1 |
| 2006 | 11வது சட்டசபை | 23,426 | 2 |
| 2009 | 15வது மக்களவை | 208,619 | 0 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+swings+AIADMK+way&artid=HtcJD1dO7X4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=
- ↑ http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf
- ↑ http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html
- ↑ http://thatstamil.oneindia.in/news/2009/03/28/tn-jaya-announces-pmks-constituencies.html
- ↑ http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/pmk-candidates.html