கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.
பின்புலம் [தொகு]
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்தாண்டுகள் (பதவிக்காலம் முழுவதும்) நீடித்தது. இந்திய வரலாற்றில் ஐந்தாண்டுகள் நீடித்த முதல் காங்கிரசு அல்லாத அரசு இதுவே. இந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “இந்தியா ஒளிர்கிறது” என்ற பிரச்சாரத்தை இத்தேர்தலில் பாஜக மேற்கொண்டது. ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரசு கூட்டணி அதிக இடங்களில் வென்றது. காங்கிரசின் வலுவான மாநிலக் கட்சிகளின் கூட்டணியும், நகர மக்களிடம் மட்டுமே செல்லுபடியான “இந்தியா ஒளிர்கிறது” பிரச்சாரமும் பாஜகவின் தோல்விக்குக் காரணங்களாக சொல்லப்பட்டன. காங்கிரசு கூட்டணி தேர்தலுக்குப் பிறகு இன்னும் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி”யாக உருவானது. இதற்கு இடதுசாரிக் கட்சிகளின் 60 உறுப்பினர்களும் வெளியிலிருந்து ஆதரவளிக்க முன் வந்தனர். ஆனால் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காதவர் என்று காரணம் சொல்லி அவரை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் பாஜக கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, சோனியா காந்தி தனக்கு பதிலாக காங்கிரசுத் தலைவர் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்.
முடிவுகள் [தொகு]
கட்சிகள் வாரியாக முடிவுகள் [தொகு]
| கட்சி |
போட்டியிட்ட மாநிலங்கள் |
போட்டியிட்ட இடங்கள் |
வென்ற இடங்கள் |
வாக்குகள் |
% வாக்கு |
% இடங்கள் |
வைப்புத் தொகை இழந்த இடங்கள் |
| இந்திய தேசிய காங்கிரசு |
33 |
400 |
145 |
103,408,949 |
26.53% |
34.43% |
82 |
| பாரதிய ஜனதா கட்சி |
31 |
364 |
138 |
86,371,561 |
22.16% |
34.39% |
57 |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
19 |
69 |
43 |
22,070,614 |
5.66% |
42.31% |
15 |
| பகுஜன் சமாஜ் கட்சி |
25 |
435 |
19 |
20,765,229 |
5.33% |
6.66% |
358 |
| சமாஜ்வாதி கட்சி |
23 |
237 |
36 |
16,824,072 |
4.32% |
10.26% |
169 |
| தெலுங்கு தேசம் கட்சி |
1 |
33 |
5 |
11,844,811 |
3.04% |
42.75% |
0 |
| இராச்டிரிய ஜனதா தளம் |
6 |
42 |
24 |
9,384,147 |
2.41% |
31.27% |
14 |
| ஐக்கிய ஜனதா தளம் |
16 |
73 |
8 |
9,144,963 |
2.35% |
17.73% |
44 |
| அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1 |
33 |
0 |
8,547,014 |
2.19% |
35.59% |
0 |
| திரிணாமுல் காங்கிரசு |
5 |
33 |
2 |
8,071,867 |
2.07% |
29.97% |
7 |
| திராவிட முன்னேற்றக் கழகம் |
1 |
16 |
16 |
7,064,393 |
1.81% |
58.24% |
0 |
| சிவசேனா |
14 |
56 |
12 |
7,056,255 |
1.81% |
17.90% |
34 |
| தேசியவாத காங்கிரஸ் கட்சி |
11 |
32 |
9 |
7,023,175 |
1.80% |
33.98% |
10 |
| ஜனதா தளம் (மதசார்பற்ற) |
12 |
43 |
3 |
5,732,296 |
1.47% |
15.67% |
24 |
| இந்திய பொதுவுடமைக் கட்சி |
15 |
34 |
10 |
5,484,111 |
1.41% |
23.70% |
19 |
| பிஜு ஜனதா தளம் |
1 |
12 |
11 |
5,082,849 |
1.30% |
51.15% |
0 |
| அகாலி தளம் |
1 |
10 |
8 |
3,506,681 |
0.90% |
43.42% |
0 |
| லோக் சன சக்தி கட்சி |
12 |
40 |
4 |
2,771,427 |
0.71% |
10.02% |
32 |
| ராஷ்டிரிய லோக் தளம் |
11 |
32 |
3 |
2,463,607 |
0.63% |
11.08% |
23 |
| தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி |
1 |
8 |
5 |
2,441,405 |
0.63% |
13.19% |
0 |
| பாட்டாளி மக்கள் கட்சி |
2 |
6 |
6 |
2,169,020 |
0.56% |
51.66% |
0 |
| அசோம் கன பரிசத் |
1 |
12 |
2 |
2,069,600 |
0.53% |
23.53% |
4 |
| இந்திய தேசிய லோக் தளம் |
4 |
20 |
0 |
1,936,703 |
0.50% |
12.60% |
14 |
| ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
4 |
9 |
5 |
1,846,843 |
0.47% |
28.43% |
3 |
| புரட்சிகர சோசலிசக் கட்சி |
3 |
6 |
3 |
1,689,794 |
0.43% |
33.50% |
2 |
| மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் |
1 |
4 |
4 |
1,679,870 |
0.43% |
58.23% |
0 |
| அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் |
5 |
10 |
3 |
1,365,055 |
0.35% |
18.81% |
7 |
| மொத்தம் |
35 |
543 |
543 |
389779784 |
100% |
- |
4218 |
மாநிலங்கள் வாரியாக [தொகு]
தேர்தலுக்குப் பிந்தய கூட்டணிகள் [தொகு]
- ஐக்கிய் முற்போக்குக் கூட்டணி: 275
- பாரதிய ஜனதாக் கட்சி 185
- இடதுசாரிகள்: 60
- இதர கட்சிகள்: 78'
- சுயேட்சைகள்: 3
மேலும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]