மன்மோகன் சிங்
| மன்மோகன் சிங் ਮਨਮੋਹਨ ਸਿੰਘ |
|
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 22 மே 2004 |
|
| குடியரசுத் தலைவர் | அப்துல் கலாம் பிரதீபா பாட்டீல் பிரனாப் முகர்ஜி |
|---|---|
| முன்னவர் | அடல் பிகாரி வாச்பாய் |
|
|
|
| பதவியில் 6 நவம்பர் 2005 – 24 அக்டோபர்2006 |
|
| முன்னவர் | நட்வர் சிங் |
| பின்வந்தவர் | பிரனாப் முகர்ஜி |
|
|
|
| பதவியில் 30 நவம்பர் 2008 – 24 ஜனவரி 2009 |
|
| முன்னவர் | பழனியப்பன் சிதம்பரம் |
| பின்வந்தவர் | பிரனாப் முகர்ஜி |
| பதவியில் 21 சூன் 1991 – 16 மே 1996 |
|
| பிரதமர் | நரசிம்ம ராவ் |
| முன்னவர் | மது தன்டவதே |
| பின்வந்தவர் | ஜஸ்வந்த் சிங் |
|
|
|
| பதவியில் 15 சனவரி 1985 – 31 ஆகசுட் 1987 |
|
| பிரதமர் | ராஜீவ் காந்தி |
| முன்னவர் | நரசிம்ம ராவ் |
| பின்வந்தவர் | சிவ் சங்கர் |
|
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
|
|
| பதவியில் 15 செப்டம்பர் 1982 – 15 சனவரி 1985 |
|
| முன்னவர் | இந்திரபிரசாத் கோர்தன்பாய் பட்டேல் |
| பின்வந்தவர் | அமிதவ் கோசு |
| அரசியல் கட்சி | UPA (இ.தே.கா) |
|
|
|
| பிறப்பு | 26 செப்டம்பர் 1932 கா, பஞ்சாப்,பிரிட்டிஷ் ராஜ் |
| வாழ்க்கைத் துணை |
குர்சகாரன் கெளர் (m. 1958) |
| பிள்ளைகள் | உபிந்தர் சிங் தமன் சிங் அம்ரித் சிங் |
| இருப்பிடம் | 7 ரேஸ் கோர்ஸ் வீதி, புது தில்லி, இந்தியா (official) குவாஹாத்தி (private) |
| பழைய மாணவர் | பஞ்சாப் பல்கலைக்கழகம், Chandigarh (B.A., M.A.) St John's College, Cambridge (Wright's Prize) University of Cambridge (Wrenbury scholar) Nuffield College, Oxford (DPhil, D.Litt., Ph.D.) |
| தொழில் | பொருளாதார நிபுனர் குடிமைப் பணி சமூக சேவையாளர் பேராசிரியர் கல்வியாளர் |
| சமயம் | சீக்கிய மதம் |
| இணையதளம் | மன்மோகன் சிங் |
மன்மோகன் சிங் (Manmohan Singh, செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் பதினான்காவது பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி [தொகு]
மன்மோகன் சிங் கா, பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு சீக்கிய கத்ரி குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார்.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் அம்ரித்சர், இந்தியாவில் குடிபெயர்ந்தனர். இவர் அங்கு அவர் இந்து கல்லூரியில் பயின்றார்.
பணி அனுபவம் [தொகு]
- பொருளாதாரத்தில் First Class Honours பட்டம் , கேம்பிரிச் பல்கலைக்கழகம், (1957)
- பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், இந்தியா
- பொருளாதாரத்தில் D.Phil பட்டம், Nuffield கல்லூரி at ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், (1962)
- தில்லி பொருளாதார பள்ளி, தில்லி பல்கலைக்கழகம்
- பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம், இந்தியா (1971-1972)
- முதன்மை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சகம், இந்தியா, (1972-1976)
- கௌரவப் பேராசிரியர் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி (1976)
- இயக்குனர், இந்திய ரிசர்வ் வங்கி (1976-1980)
- இயக்குனர், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (1976-1980)
- செயலர், நிதி அமைச்சகம் (பொருளாதார அலுவல் பிரிவு), இந்திய அரசு, (1977-1980)
- ஆளுனர், இந்திய ரிசர்வ் வங்கி (1982-1985)
- துணைத் தலைவர், இந்தியத் திட்டப்பணி ஆணையம், (1985-1987)
- பொருளாதார விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் (1990-1991)
- இந்திய நிதி அமைச்சர், (ஜூன் 21, 1991 - மே 15, 1996)
- எதிர்க்கட்சித் தலைவர், இந்திய நாடாளுமன்ற மேலவை
- இந்தியப் பிரதமர் (மே 22,2004 - இன்று வரை)
| முன்னவர்: அடல் பிகாரி வாஜ்பாய் |
இந்தியப் பிரதமர்கள் 2004—இன்று வரை |
அடுத்தவர்: - |
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Manmohan Singh தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
|
|||||||