தேவ கௌடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எச். டி. தேவ கவுடா


பதவியில்
ஜூன் 1, 1996 – ஏப்ரல் 21, 1997
முன்னவர் அடல் பிஹாரி வாஜ்பாய்
பின்வந்தவர் ஐ. கே. குஜரால்

அரசியல் கட்சி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

பிறப்பு 18 மே 1933 (1933-05-18) (அகவை 81)
ஹரதனஹள்ளி, மைசூர், பிரித்தானிய இந்தியா
வாழ்க்கைத்
துணை
சென்னம்மா
பிள்ளைகள் 4 மகன்கள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள்
இருப்பிடம் பெங்களூர்
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து மதம்
செப்டம்பர் 25 இன் படியான தகவல், 2006
மூலம்: [1]

ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவெ கௌடா (Haradanahalli Doddegowda Deve Gowda, கன்னடம்: ಹರದನಹಳ್ಳಿ ದೊಡ್ಡೇಗೌಡ ದೇವೇಗೌಡ) (பிறப்பு மே 18,1933[1]) இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.

விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தேவ கௌடா,[2] 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கௌடா 1970களில் ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980இல் அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார். 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முந்தைய ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க முடியாதநிலையில் புதியதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார்.

1999இல் ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்றளவும் உள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile on website of Prime Minister's Office".
  2. "Asiaweek article". பார்த்த நாள் 2007-09-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேவ_கௌடா&oldid=1665531" இருந்து மீள்விக்கப்பட்டது