ஜனதா தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜனதா தளக் கட்சியின் சின்னம்

ஜனதா தளம் (Janata Dal) இது ஒரு இந்திய அரசியல் கட்சியாகும், இக்கட்சி ஜனதா கட்சி மற்றும் லோக் தளம் என்ற இரு இந்திய அரசியல் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். (லோக் தளம் திரு.வி. பி. சிங் அவர்களால் இந்திய தேசிய கங்கிரசில் இருந்து பிரிந்து வந்தபொழுது துவக்கப்பட்ட கட்சியாகும்).

ஜனதா தளம் 1989 இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும் இந்தியப் பிரதமருமான திரு ராஜிவ் காந்தி அவர்கள் போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினால் தேர்தலில் தோல்வி கண்டதினால் இந்திய அரசின் ஆட்சிக்கு வந்தது. தேசிய முன்னணி என்ற கூட்டணி அரசாக பாரதீய ஜனதா கட்சி வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது. வி. பி. சிங் இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் ஆட்சியில் பங்கு கொண்டார். 1990 இல் கூட்டணியின் பிளவால் புதிய அரசு திரு சந்திரசேகர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தியது. சந்திரசேகர் ஜனதா தள முத்த தலைவர்களில் ஒருவராவர். ஜனதா தளம் கட்சி வி. பி. சிங் தலைமையில் இயங்கியது. ஆனால் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது கூட்டணி விரிசலினால் விரைவிலேயே தேர்தலை சந்திக்க நேர்ந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவானது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜனதா_தளம்&oldid=1353195" இருந்து மீள்விக்கப்பட்டது