லால் கிருஷ்ண அத்வானி
| லால் கிருஷ்ண அத்வானி | |
|
எதிர் கட்சித் தலைவர்
|
|
| பதவியில் ஜூன் 1 2004 – இன்று |
|
| முன்னவர் | சோனியா காந்தி |
|---|---|
| பின்வந்தவர் | பதவியிலுள்ளார் |
|
இந்திய துணை பிரதமர், இந்திய உள்துறை அமைச்சர்
|
|
| பதவியில் ஜூன் 29 2002 – மே 20 2004 |
|
| பிரதமர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
| முன்னவர் | சௌதரி தேவி லால் (1991 முதல் துணை) எல். கே. ஆட்வாணி (உள்துறை) |
| பின்வந்தவர் | பதவி அழிக்கப்பட்டது சிவ்ராஜ் பாட்டில் (உள்துறை) |
|
|
|
| பதவியில் அக்டோபர் 13 1999 – ஜூன் 28 2002 |
|
| பிரதமர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
| முன்னவர் | எல். கே. ஆட்வாணி |
| பின்வந்தவர் | எல். கே. ஆட்வாணி |
|
|
|
| பதவியில் மார்ச் 19 1998 – ஏப்ரல் 26 1999 |
|
| பிரதமர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
| முன்னவர் | இந்திரஜித் குப்தா |
| பின்வந்தவர் | எல். கே. ஆட்வாணி |
|
|
|
| பதவியில் மே 16 1996 – ஜூன் 1 1996 |
|
| பிரதமர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
| முன்னவர் | ஷங்கர்ராவ் சவன் |
| பின்வந்தவர் | இந்திரஜித் குப்தா |
|
|
|
| பதவியில் மார்ச் 24 1977 – ஜூலை 15 1979 |
|
| பிரதமர் | மொரார்ஜி தேசாய் |
| முன்னவர் | வித்யா சரண் சுக்லா |
| பின்வந்தவர் | வித்யா சரண் சுக்லா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
|
|
|
| பிறப்பு | நவம்பர் 8, 1927 கராச்சி, பிரித்தானிய இந்தியா |
| வாழ்க்கைத் துணை |
கம்லா ஆட்வாணி |
| பிள்ளைகள் | பிரதிபா ஆட்வாணி, ஜெயந்த் ஆட்வாணி |
| பழைய மாணவர் | மும்பை பல்கலைக்கழகம் |
| தொழில் | வழக்கறிஞர் |
| சமயம் | இந்து |
| இணையதளம் | எல். கே. ஆட்வாணி |
லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். தற்போது இந்திய மக்களவையில் எதிர் கட்சி தலைவராக உள்ளார். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணை பிரதமராக பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற உள்ள இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்துள்ளது.
பொருளடக்கம் |
அறிமுகம்[தொகு]
ரத்தபிரிவுக்கு அவரவர் விருப்பப்படி பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால் போதும்., அத்வானி துளியும் யோசிக்க மாட்டார். என்னுடைய ரத்தபிரிவு ஆர்.எஸ்.எஸ் பாஸிட்டிவ் என்று பகிரங்கமாக சொல்லிவிடுவார். அத்தனை தீவிரமான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அவர். என்ற எளிய அறிமுகத்தை வேறு யாரும் அவருக்கு இனி தர முடியாது.
தனக்கு விருப்பமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளத்தால் அதிகம் நேசிக்கப்பட்டவர் அல்ல அத்வானி. துவேஷிக்கப்பட்டவர். அதற்காக எந்த ஒரு தருணத்திலும் அவர் வருந்தியதே இல்லை.! ஏனெனில் அவரின் அடையாளம் அது! என்ற வார்த்தைகள் சத்தியம் நிறைந்தவை.
இளமை காலம்[தொகு]
இன்றைய கராச்சி நகர், அன்றைக்கு சிந்து மாகாணம்., இந்த நிலப்பரப்பு தான் அத்வானியை நமக்கு தந்த பூமி. ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்கு போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் ஹிந்து.! ஹிந்து..!
பிரிவினை என்பதை அடியோடு நிராகரிக்கும் ஆர்.எஸ்.எஸ் மீது., அத்வானிக்கு ஈர்ப்பு அதிகரிக்க தொடங்கியது. அது தான் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் ஊழியராக வைத்திருக்கிறது.
அரசியல் பக்கம்[தொகு]
ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது., ஆனால் வலிகளும் நிறைந்தது. உபாத்யாயாவிற்கு பிறகு கட்சியை வழிநடத்தும் பொருப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், சந்திர சேகர் என்று இவர் மீதும் பா.ஜ.க மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம். ஆனால் அவர்கள் கூட காரியம் முடிந்ததும், இவரையும் கட்சியையும் தூக்கி எரிந்த போதுதான்., வாங்கிய அடியின் வலியை கூட இவரால் உணரமுடிந்தது.
வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான். அந்த அளவுக்கு ஆழ்ந்த அரசியல் அனுபவம் அவருக்கு!
எமர்ஜென்சி, மிசா காலத்தில் இருந்து மீண்டு., கட்சியை கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொருப்புகள் ஒப்படைக்கப்படும்., ஏனெனில் எதற்கும் கலங்காதவர் இவர்.திறமைசாலி., உறுதியானவர் என்று கட்சியில் அனைத்து தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.
ராமர் ஆலயம்[தொகு]
பஜனை செய்வதற்காகவோ, கீர்த்தனை பாடுவதற்காகவோ அயோத்திக்கு செல்லவில்லை. அந்த இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு. 1992-ல் அத்வானி கூறியது இது தான்.
தேர்தலில் வெற்றி கிடக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கோஷத்தை உச்சஸ்தானியில் ஒலிக்க தொடங்கினார் அத்வானி. அது தான் நேரம், உ.பி-யில் பாஜக ஆட்சி. வேறு என்ன வேண்டும். தொடங்கினர், ரத யாத்திரையை, குமிந்தனர் ஹிந்துக்கள் அயோத்தியில். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர் ஆலயம் கட்டும் பணி கரசேவைக்காக...!
எல்லோரு எதிர்பார்த்தது போல்., பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது டிச.6. தேசிய அவமானம் என்றார் அன்றைய பிரதமர் நரசிம்மராவ். ஆனால் அதற்கு நரசிம்மராவின் மௌனமும் முழுக்காரணம் தான்., அத்வானி மீதும், பாஜக மீதும் மட்டுமே குற்றம் சுமத்துகின்றனர்., தற்போதைய லிபரான் கமிஷன் அறிக்கை போன்று. ஏன் என்று தெரியவில்லை.?!
எமர்ஜென்சி காலம்[தொகு]
அத்வானி பற்றிய மிசா கொடுமைகள் சொல்லிமாளாது. எதிர்கட்சியினர் 1,10,000 பேர் கைது, 253 பத்திரிக்கையாளர்கள் கைது, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் உரிமம் ரத்து போன்ற கொடுமைகளை அனுபவித்தனர்.
உறுதியான மனிதரை உலுக்கியவை[தொகு]
ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது சூப்பர்.
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது என்பது உண்மையான உண்மை. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து தான், 831 பயணிகளை மீட்டார். இந்த விவகாரம் அவரின் மிஸ்டர்.கம்பீரம் இமேஜை காலிசெய்தது.
இத்தோடு போகவில்லை, நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் நடத்தப்பட்ட தாக்குதல், மேலும் அவரின் மன உறுதியை பாதித்தது. அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி அப்சல் குரு, இன்னும் தூக்கிலிடப்படாதது இச் சட்டத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாததைக் குறிக்கிறது. இது மேலும் மும்பை தாக்குதல் 26/11 போன்ற கொடூரங்களுக்கு வழிவகுக்கும்.
ஜின்னா ஒரு தியாகி - அத்வானி[தொகு]
ஜின்னா ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அத்வானி - சில வரிகள்[தொகு]
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ரதயாத்திரை கிளம்பிய போது இருந்த அதே வேகம் அத்வானியிடம் இன்னமும் இருக்கிறது. வீரியம் அப்படியே இருக்கிறது. நம்பிக்கை அப்படியே இருக்கிறது.
இணைப்புகள்[தொகு]
1. அத்வானி, ஒரு காவிய நாயகன் - தமிழில் வலைப்பூ
2. அத்வானி - கிழக்கின் புத்தகம்
| இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |