சுத்தி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூய்மைப்படுத்தும் சடங்கு அல்லது சுத்தி இயக்கம் (Shuddhi) 1920-இல் பிரித்தானிய இந்தியாவில் இந்து சமயத்திலிருந்து பிற சமயகளுக்கு மாறியவர்களை மீண்டும் இந்து சமயத்திற்குள் சேர்த்து கொள்வதற்கு செய்யப்படும் சமயச் சடங்கு ஆகும். வட இந்தியாவில் 1920களில் இத்தூய்மைப்படுத்தும் சடங்கினை துவக்கியவர் தயானந்த சரசுவதி ஆவார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடரான சுவாமி சிரத்தானந்தர்[1] 1920களில் சுத்தி இயக்கம் எனும் பெயரில் இப்பணியை பஞ்சாப் பகுதியில் செய்தார். இதனால் சுவாமி சிரத்தானந்தர், இசுலாமிய கடும்போக்குவாதியான ஒரு முஸ்லீமால் கொல்லப்பட்டார்.

சுத்தி இயக்கம்[தொகு]

சமூக-பொருளாதார இயக்கமான சுத்தி இயக்கம் பண்டைய இந்து சமயச் சடங்கிலிருந்து தோன்றியதாகும்.[2] சுத்தி இயக்கத்தை ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரசுவதி சுத்தி இயக்கத்தை முதலில் தொடங்கினார்.[3] பின்னர் தயானந்த சரசுவதியின் சீடர்களில் ஒருவரான சுவாமி சிரத்தானந்தர் 1920களில் வட இந்தியாவில் பஞ்சாப் பகுதிகளில் சுத்தி இயக்கம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பரவியது. [3]

சுத்தி இயக்கம் பகுத்தறிவு அடிப்படையில் சமூக சீர்திருத்தப் பணியை நோக்கமாகக் கொன்டு, இந்து சமயத்தில் தீண்டாமையை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டிருந்தது. சுத்தி இயக்கம், இசுலாம் போன்ற பிற சமயங்க்ளுக்கு மாறியவர்களை மீண்டும் இந்து சமயத்திற்குள் கொண்டு வருவதற்கும், தீண்டாமை ஒழிப்பு மூலம் மற்ற மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்களின் நிலையை உயர்த்துவதன் மூலம் அவர்களை சமூகத்தில் ஒருங்கிணைப்பதன் மூலமும், தன்னம்பிக்கையையும் சுயநிர்ணயத்தையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.[3][4][5] இந்த சமயத்தில் இந்து சமயத்தவர்களை இசுலாம் மற்றும் கிறிஸ்தவர்களாக மாற்றுவதை குறைக்க இந்த இயக்கம் பாடுபட்டது.[3]

பிற சமயங்களை தழுவிய இந்து சமயத்தவர்களை மீண்டும் தாய் மதமான இந்து சமயத்தில் சேர்க்கும் பொருட்டு, சுவாமி சிரத்தானந்தர் 1923-இல் பாரதிய சுத்தி மகாசபையை நிறுவினார். இது இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு உருவாக்கியது. மகாத்மா காந்தி சுவாமி சிரத்தானந்தர் குறித்து 'இந்து-முஸ்லீம் மோதல்: காரணங்கள் மற்றும் எதிர்ப்பு' என்ற தலைப்பில் 1922 மே 29 யங் இந்தியா இதழில் ஒரு கருத்தை வெளியிட்டார்.

சுவாமி சிரத்தானந்தர் அவநம்பிக்கையின் ஒரு பாத்திரமாகவும் மாறிவிட்டார். அவரது பேச்சுக்கள் அடிக்கடி ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதை நான் அறிவேன். ஒவ்வொரு முஸ்லீமல்லாதவரும் ஒரு நாள் இஸ்லாத்திற்கு மாறுவார்கள் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நினைப்பது போல், சிரத்தானந்தரும் இசுலாமுக்கு மதம் மாறிய ஒவ்வொரு முஸ்லிமையும் இந்து சமயத்தில் இணைவார் என்று நம்புகிறார். சிரத்தானந்தர் பயமற்றவர் மற்றும் தைரியமானவர். அவர் மட்டுமே புனித கங்கையில் பிரம்மச்சார்ய ஆசிரமத்தை (குருகுலம்) கட்டியுள்ளார். ஆனால் சுத்தி இயக்கத்தினர் அவசரப்படுகிறார்கள், அது விரைவில் மாறும். அவர் அதை ஆரிய சமுதாயத்திலிருந்த பெற்றார்.

காந்தியின் கட்டுரைக்கு சிரத்தானந்தர் கீழ்கண்டவாறு பதில் அளித்தார்: "ஆரிய சமாஜம் தங்களுக்கு உண்மையாக இருந்தால், மகாத்மா காந்தி அல்லது வேறு எந்த நபரின் குற்றச்சாட்டுகள் மற்றும் படையெடுப்புகளும் ஆர்ய சமாஜின் போக்குகளை தடுக்க முடியாது."

சிரத்தானந்தர் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி நகர்ந்தார். மேற்கு யுனைடெட் மாகாணத்தில் மல்கனா[6] இசுலாமிய ராஜபுத்திரர்களின் மறுசீரமைப்பே முக்கிய சர்ச்சையாக இருந்தது. [7] [4]மேலும் இயக்கத்தின் தலைவர் சுவாமி சிரத்தானந்தரின் கொலைக்கு வழிவகுத்தது. 1926-ஆம் ஆண்டில் சுவாமி சிரத்தானந்தர் ஒரு முஸ்லீம் இளைஞனால் கொல்லப்பட்டார்.[8] அவர் இறந்த பிறகும் இந்த இயக்கம் தன் இலக்கை நோக்கி தொடர்ந்தது.

1920 களின் பிற்பகுதியில், கொங்கண் பகுதியில் சதாரா மாவட்டத்தில் வாழ்ந்த கத்தோலிக்க பஞ்ச கவுட பிராமணர்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்க தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனால் கத்தோலிக்க பஞ்ச கவுடா பிராமணர்களில் கணிசமானவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு 23 பிப்ரவரி 1928 அன்று கோவாவில் உள்ள பல கத்தோலிக்க கவுடா பிராமணர்களின் திருச்சபை மற்றும் போர்த்துகீசிய அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சுத்தி சடங்கு செய்து மாற்றப்பட்டனர்.[9] இந்து சமயத்திற்கு மாற்றப்பட்டவர்களுக்கு சமசுகிருத இந்து பெயர்கள் வழங்கப்பட்டன, ஆனால் கோவா போர்த்துகீசிய அரசாங்கம் அவர்களின் புதிய இந்து பெயர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி பெற தடைகளை ஏற்படுத்தியது. [10] திஸ்வாடியிலிருந்து 4851 கத்தோலிக்க |பஞ்ச கவுடா பிராமணர்களும், போண்டாவிலிருந்து 2174, பிச்சோலிமில் இருந்து 250 மற்றும் சத்தாரியில் இருந்து 329 பேரும், சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர். இந்து மதத்திற்கு மாறியவர்களின் மொத்த எண்ணிக்கை 7815 ஆகும். [11] கத்தோலிக்க பிராமண முன்னோர்கள் சாதி தூய்மையைப் பேணாததால், தற்போதுள்ள இந்து கவுடா சமூகம் இந்த புதிய இந்துக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்த புதிய இந்துக்கள் தனிச் சமூகமாக வளர்ந்தனர், இப்போது அவை புதிய-இந்து கவுடர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், வட இந்தியாவில் இந்த இயக்கம் பரேல்வி இயக்கத்தின் ஜமாத் ராசா-இ-முஸ்தபா போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது, இது பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களை இந்து மதத்திற்கு மாற்றுவதற்கான சுத்தி இயக்கத்தின் முயற்சிகளை எதிர்கொள்ள முயன்றது. [12][13]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Swami Shraddhanand
  2. Hindu-Muslim Relations in British India: A Study of Controversy, Conflict, and Communal Movements in Northern India 1923-1928, by G. R. Thursby. Published by BRILL, 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04380-2. Lame'Page 136.
  3. 3.0 3.1 3.2 3.3 Dayanand and the Shuddhi Movement Indian Political Tradition, by D.K Mohanty. Published by Anmol Publications PVT. LTD. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-2033-9. Page 116.
  4. 4.0 4.1 untouchable assertion The Politics of the Urban Poor in Early Twentieth-century India, by Nandini Gooptu. Published by Cambridge University Press, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-44366-0. Page 157.
  5. The Khilafat Movement: Religious Symbolism and Political Mobilization in India, by Gail Minault, Akhtar. Published by Columbia University Press, 1982. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-05072-0. Page 193.
  6. https://en.wikipedia.org/wiki/Malkana Malkana]
  7. The Fundamentalism Project, by Martin E. Marty, R. Scott Appleby, American Academy of Arts and Sciences. Published by University of Chicago Press, 1991.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226508781. Page 564.
  8. Hindu Nationalism and the Language of Politics in Late Colonial India, by William Gould. Published by Cambridge University Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-83061-3. Page 133.
  9. Ghai, R. K. (1990). Shuddhi movement in India: a study of its socio-political dimensions. Commonwealth Publishers. பக். 208 pages (see page 103). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171690428. 
  10. Ralhan, Om Prakash (1998). Post-independence India: Indian National Congress, Volumes 33-50. Anmol Publications PVT. LTD.. பக். 6330 pages (see pages 304–305). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174888655. 
  11. Godbole, Shriranga (December 2010). Sanskrutik Vartapatra. Pune: Sanskrutik Vartapatra. பக். 61–66 & 112. 
  12. Centre national de la recherche scientifique (France) & Comissão Nacional para as Comemorações dos Descobrimentos Portugueses 2001, ப. 458
  13. Hasan, M.; Jamia Millia Islamia (India). Dept. of History (1985). Communal and pan-Islamic trends in colonial India. Manohar. https://books.google.com/books?id=xRBuAAAAMAAJ. பார்த்த நாள்: 2015-07-28. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தி_இயக்கம்&oldid=3247804" இலிருந்து மீள்விக்கப்பட்டது