எஸ். பி. பாலசுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். பி. பாலசுப்ரமணியம்

பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஜூன் 4, 1946 (1946-06-04) (அகவை 68)
பிறப்பிடம் இந்தியாவின் கொடி ஆந்திரப் பிரதேசம்
இசை வகை(கள்) திரைப்படப் பாடல்
தொழில்(கள்) பாடகர் , நடிகர் , திரைப்பட தயாரிப்பாளர்
இசைத்துறையில் 1966 -
வலைத்தளம் இணையத்தளம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.

தொடக்கம்[தொகு]

1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் முதலில் பாடியது சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா வெளிவந்தது.

சாதனைகள்[தொகு]

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.


தேசியவிருதுகள்[தொகு]

வருடம் திரைப்படம் பாடல் மொழி
1996 மின்சார கனவு தங்க தாமரை தமிழ்
1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை உமண்டு க்ஹுமண்டு கன கர் கன்னடம்
1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி தெலுங்கு
1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன தெலுங்கு
1981 ஏக துஜே கே லியே தேரே மேரே பீச் மேனி இந்தி
1979 சங்கர்பாரணம் ஓம் கார நதானு தெலுங்கு

பங்காற்றிய துறைகள்[தொகு]

தொலைக்காட்சியில்[தொகு]

பெயர் மொழி குறிப்புகள்
நதி எங்கே போகிறது தமிழ் நெடுந்தொடர்
சன்னல் தமிழ் நெடுந்தொடர்
வானம்பாடி தமிழ் இசை நிகழ்ச்சி
பாடுதே தீயாக தெலுங்கு இசை நிகழ்ச்சி
பாடலானி உந்தி தெலுங்கு இசை நிகழ்ச்சி
Endaro Mahanubhavulu தெலுங்கு நெடுந்தொடர்
என்னோடு பாட்டுப் பாடுங்கள் தமிழ் இசை நிகழ்ச்சி
இதே தம்பி ஹாடுவேனு கன்னடம் இசை நிகழ்ச்சி