எட்மண்ட் இல்லரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எட்மண்ட் ஹில்லரி | |
|---|---|
|
எட்மண்ட் ஹில்லரி
|
|
| பிறப்பு | ஜூலை 20, 1919 (88 அகவை) துவாகௌ (Tuakau), வடக்குத் தீவு, நியூசிலாந்து |
| இறப்பு | சனவரி 11 2008 (அகவை 88) ஆக்லாந்து, நியூசிலாந்து |
| துணை | லூயிஸ் மேரி ரோஸ்(1953-1975), ஜூன் மல்குரூ (1989-தற்பொழுது) |
| பிள்ளைகள் | பீட்டர் (1954), சாரா (1955), பெலிண்டா (1959-1975) |
சர் எட்மண்ட் ஹில்லரி (ஜூலை 20, 1919 - ஜனவரி 11, 2008) நியூசிலாந்து நாட்டுப் புகழ்பெற்ற மலையேறுநர். மே 29 1953 ஆம் நாள் தனது 33 ஆம் அகவையில் ஷெர்ப்பா மலையேறுநர் டென்சிங் நோர்கே அவர்களுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் ஹில்லரி எவரெஸ்ட் மீது ஏறியது ஜான் ஹண்ட் என்பார் தலைமையில் பிரித்தானியரின் ஒன்பதாவது முறையாக எடுத்த முயற்சியின் பகுதியாகும்.
அகவாழ்வு [தொகு]
எட்மண்ட் 1953 ஆம் ஆண்டு மேரி ரோஸ் என்பவரை மணம் முடித்தார். அவர் மூலமாக ஒரு மகனையும் இரு மகள்களையும் பெற்றெடுத்தார். 1975ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் அவரது மனைவியும் ஒரு மகளும் பலியாயினர். 1989 ஆம் ஆண்டு ஜீன் மல்க்ரூ என்பவரை மணம் முடித்தார்.
மரணம் [தொகு]
எட்மண்ட்தனது 88 ஆம் அகவையில் இதயநோயினால் காலமானார்.
நியூசிலாந்து நாட்டு டாலரில் எட்மண்ட் ஹில்லரியின் படம்