அரிசு சந்திர சரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிசு சந்திர சரின்
பிறப்பு(1914-05-27)மே 27, 1914
தியோரியா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புசனவரி 27, 1997(1997-01-27) (அகவை 82)
பணிகுடிமைப்பணி அதிகாரி, எழுத்தாளர்
அறியப்படுவதுபாதுகாப்புச் செயலர்
வாழ்க்கைத்
துணை
புஷ்பா சரின்
விருதுகள்

அரிசு சந்திர சரின் (Harish Chandra Sarin) என்பவர் (1914-1997) இந்திய அரசு அதிகாரி, எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ஆவார்.[1] இவர் நவம்பர் 3, 1968 முதல் திசம்பர் 7, 1970 வரை பதவியிலிருந்தார்[2] இவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர்.

சாரின், மே 27, 1914-ல் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியாவில் பிறந்தார் மற்றும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.[3] ஓய்வுபெறும் வயதைக் கடந்தும் இவர் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். புஷ்பா ரத்தோரை மணந்த சரின், ஜனவரி 27, 1997-ல் இறந்தார். இந்திய அரசு இவருக்கு 1967-ல் இரண்டாவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்ம விபூசண்[4] விருதினை வழங்கியது. இவர் இந்திய மலையேறுதல் அறக்கட்டளையின் சிறப்பு விருதினை 1993ஆம் ஆண்டு பெற்றார்.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "HC Sarin - Department Of Defence". mod.gov.in (in ஆங்கிலம்). 2018-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  2. "Defence Secretaries of India". Ministry of Defence, Government of India. 2018-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  3. 3.0 3.1 "IN MEMORIAM - Himalayan Journal volume 53-19". www.himalayanclub.org. 2018-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  4. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.


முன்னர்
வி. சங்கர்
இந்திய பாதுகாப்பு செயலர்
1968–1970
பின்னர்
கே. பி. லால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசு_சந்திர_சரின்&oldid=3532185" இலிருந்து மீள்விக்கப்பட்டது