பி. ஏ. சங்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பி. ஏ. சங்மா

பதவியில்
1977-1989, மே 1991 - மே 2009
முன்னவர் Sanford Marak
பின்வந்தவர் அகதா சங்மா
தொகுதி டுரா

பதவியில்
பிப்ரவரி 6, 1988 - மார்ச்சு 25, 1990

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை
பதவியில்
1995-96

பதவியில்
மே 25, 1996 - மார்ச்சு 23, 1998
அரசியல் கட்சி NCP

பிறப்பு 1 செப்டம்பர் 1947 (1947-09-01) (அகவை 67)
மேற்கு காரோ மலை மாவட்டம், மேகாலயா
வாழ்க்கைத்
துணை
Soradini K. Sangma
பிள்ளைகள் 2 மகன், 2 மகள்
இருப்பிடம் மேற்கு காரோ மலை மாவட்டம்
சமயம் ரோமன் கத்தோலிக்

பூர்னோ அகிடோக் சங்மா (மேகாலயா, இந்தியா) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி. மக்களவைத் தலைவராகவும்[1] மேகாலயா முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தேசியவாத காங்கிரசு கட்சியின் (NCP) நிறுவனர்களில் ஒருவர். இந்திய மக்களவைக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.[2]

பிறப்பும் படிப்பும்[தொகு]

மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் 1947 ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பி. ஏ. சங்மா பிறந்தார். அங்குள்ள புனித அந்தோணி கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார். பின்பு, திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் எம்.ஏ பட்டம் பெற்றார். பின்பு எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1973ல் இளைஞர் காங்கிரஸில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் பரிணாம வளர்ச்சி அடைந்தார். 1975 - 1980 களில் மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-1990 வரை மேகாலயா மாநில முதல்வராக இருந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் எழுந்த (சோனியா காந்தி வெளிநாட்டவர்) கருத்து வேறுபாட்டின் காரணமாக சரத்பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கினார். பின்பு அக்கட்சியின் தலைவரான சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பின்பற்றுவதை எதிர்த்து தேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

மக்களவையில்[தொகு]

இந்திய மக்களவையில் 6வது, 7வது, 8வது, 10வது, 11வது, 12வது, 13வது, 14வது களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடைசியாக, மேகாலயாவின் எட்டாவது சட்டமன்றத்திற்கு மேற்கு காரோ குன்று மாவட்டத்தின் டுரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மந்திரி பதவியும், மக்களவைத் தலைவர் பதவியும்[தொகு]

  • 1991 - 1993 - மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர்
  • 1993 - 1995 - மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர்
  • 1995 - 1996 - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை காபினெட் அமைச்சர்
  • 1996 - 1998 - மக்களவைத் தலைவர்

2012 நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு திரட்டினார். இவரை ஆதரிக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் செ. செயலலிதாவும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்தனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஏ._சங்மா&oldid=1761938" இருந்து மீள்விக்கப்பட்டது