மே 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 29 கிரிகோரியன் ஆண்டின் 149ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 150ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1453 - ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
- 1660 - இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
- 1677 - வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- 1727 - இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
- 1780 - அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர்.
- 1790 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1848 - விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1864 - மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான்.
- 1867 - ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
- 1869 - பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
- 1886 - வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.
- 1903 - சேர்பியாவின் மன்னன் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1914 - புனித லோரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.
- 1919 - ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
- 1947 - இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 1953 - முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.
- 1972 - டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- 1982 - இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1985 - பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தீன் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
- 1988 - அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.
- 1990 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
- 1999 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.
- 1999 - 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.
- 2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.
பிறப்புகள் [தொகு]
- 1872 - சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)
- 1917 - ஜோன் எஃப். கென்னடி, ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
- 1984 - கார்மெலோ ஆந்தனி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1500 - பார்த்தலோமியூ டயஸ், போர்த்துக்கேய நாடுகாண் பயணி
- 1892 - பஹாவுல்லா, பஹாய் மத தாபகர் (பி. 1817)
- 1987 - சரண் சிங், இந்தியக் குடியரசின் ஏழாவது பிரதமர் (பி. 1902)
- 1994 - எரிக் ஹோனெக்கர், கிழக்கு ஜெர்மனியின் கடைசி அதிபர் (பி. 1912)