ஏப்ரல் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 111ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
- 1653 - ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- 1657 - அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
- 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.
- 1792 - பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.
- 1859 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
- 1862 - லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.
- 1902 - பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
- 1914 - ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
- 1926 - திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
- 1945 - அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
- 1961 - கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
- 1967 - சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
- 1968 - தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
- 1978 - தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
- 1998 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
- 1999 - கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.
- 2007 - டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.
பிறப்புகள்[தொகு]
- 570 - முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப்படவில்லை)
- 1808 - மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
- 1889 - அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945)
- 1910 - சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
- 1918 - காய் சீக்பான், நோபல் பரிசு பெற்றவர்
- 1927 - கார்ல் முல்லர், நோபல் பரிசு பெற்றவர்
- 1939 - பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
- 1950 - நா. சந்திரபாபு நாயுடு, இந்திய அரசியல்வாதி
இறப்புகள்[தொகு]
- 1918 - கார்ல் பிரவுன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1850)
- 2003 - பேர்னார்ட் காட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)