அக்டோபர் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 30 கிரிகோரியன் ஆண்டின் 303வது நாளாகும். நெட்டாண்டுகளில் 304வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1485 - ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
- 1831 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.
- 1905 - ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான்.
- 1918 - ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
- 1920 - அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
- 1922 - முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.
- 1925 - ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
- 1941 - மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
- 1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.
- 1961 - சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள "சார் பொம்பா" என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
- 1961 - ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
- 1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
- 1970 - வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1972 - சிக்காகோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
- 1973 - ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.
- 1985 - சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
- 1991 - மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.
- 1995 - கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
- 2001 - இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
- 2006 - ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
- 2006 - பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கார் பகுதியில் உள்ள மதரசா மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1735 - ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1826)
- 1821 - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
- 1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)
- 1909 - ஹோமி பாபா, இந்திய அணிவியல், இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)
- 1962 - கொட்னி வோல்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட பந்து வீச்சாளர்
- 1977- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1910 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)
- 1963 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
- 1973 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
- 1975 - குஸ்டாவ் லுட்வீக் ஹேர்ட்ஸ், ஜேர்மனிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- 1979 - சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)
- 1999 - சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கையின் மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913).