அக்டோபர் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 29 கிரிகோரியன் ஆண்டின் 302வது நாளாகும். நெட்டாண்டுகளில் 303வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 63 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 969 - பைசண்டைன் படைகள் சிரியாவின் அண்டியோக் நகரைக் கைப்பற்றின.
- 1422 - ஏழாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
- 1618 - ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சிற்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரனதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
- 1665 - போர்த்துக்கல் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அண்டோனியாவைக் கொன்றனர்.
- 1859 - ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது.
- 1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
- 1886 - அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1901 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1913 - எல் சல்வடோரில் பெரும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
- 1922 - முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார்.
- 1923 - ஓட்டோமான் பேரரசு முறிவடைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.
- 1929 - "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
- 1948 - "சாஃப்சாஃப்" என்ற பாலஸ்தீனக் கிராமமொன்றில் புகுந்த இஸ்ரேலியர்கள் 70 பாலஸ்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.
- 1950 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
- 1956 - இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.
- 1961 - ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.
- 1964 - தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.
- 1964 - 565 கரட் (113 கிராம்) "ஸ்டார் ஒஃப் இந்தியா" உட்படப் பல பெறுமதி மிக்க வைரங்கள் நியூ யோர்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.
- 1967 - மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
- 1969 - உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.
- 1983 - துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1991 - நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் ஆனது.
- 1998 - டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1998 - 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
- 1998 - சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது.
- 1999 - ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
- 2002 - வியட்நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- 2005 - டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60பேர் வரை கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1971 - மதிவ் எய்டன், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
- 1981 - ரீமா சென், இந்திய திரைப்பட நடிகை
- 1985 - விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்
இறப்புகள் [தொகு]
- 2001 - ஆர். சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, மற்றும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளர்
- 2007 - லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)