இணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி
சில இணையத்தளங்கள் மற்றும் சேவைகள்

இணையம் (ஒலிப்பு) (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு, உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட இணைய தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.[1][2][3]

வரலாறு[தொகு]

1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவணம் செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.

ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணையத் தந்தையாக அறியப்படுகிறார் இணையம் - இன்று ஒரு தகவல் பரணிடப்பட்டது 2011-01-10 at the வந்தவழி இயந்திரம்

முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.

1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப்பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணைய தளமானது உருவாக்கப்பட்டது.

ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள்.

இணையத்தின் தோற்றம்[தொகு]

1957-ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்னும் ஆளில்லா செயற்கைக் கோளை விண்ணில் பறக்கவிட்டது. இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டாகியது. விண்வெளி ஆய்வில் தாம் பின்தங்கிவிடக் கூடாது என்கிற அக்கறையும் அவாவும் அமெரிக்காவுக்குப் பிறந்தது. எனவே, அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர், உடனடியாக ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணை பிறப்பித்தார். அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ (ARPA – Advanced Research Project Agency) எனப்பட்டது.

’ஆர்ப்பா’வின் முதன்மைக் குறிக்கோள் சோவியத் யூனியனைப் போன்று விண்கலனை ஏவிப் பரிசோதனை செய்வதேயாகும்.அடுத்த ஆண்டான 1958-இல் அமெரிக்காவின் ‘எக்ஸ்புளோரர்’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதே வேளையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புத் துறையில் தகவல் தொடர்புக்குக் கணினியைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளிப் பயண ஆய்வில் ஈடுபட்டிருந்த ’ஆர்ப்பா’ ஆய்வு மையத்திடம் அமெரிக்க இராணுவத் துறையில் கணினியின் பயன்பாட்டை மேம்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது. 1962-இல் டாக்டர் ஜே.சி.ஆர்.லிக்லைடர் தலைமையில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

கணினிப் பிணையங்கள், கணினி வழியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ’ஆர்ப்பா’ முதலில் கவனம் செலுத்தியது. ஒரு புதுவகையான கணினிப் பிணையத்தை நிறுவுவது ‘ஆர்ப்பா’வின் தொடக்கத் திட்டமாக இருந்தது. அயல்நாட்டுடன் போர்மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தின் ஒருபகுதி சிதைக்கப்பட்டாலும் பிணையத்தின் மீதிப் பகுதி எவ்வித பாதிப்புமின்றிச் செயல்பட வேண்டுமென எண்ணினர்.

இதுபோன்றதொரு, அதாவது இன்றைய ’இணையம்’ போன்ற ஒரு பிணையத்தை வடிவமைக்கும் முயற்சியில் அமெரிக்காவின் ‘ரேண்டு’ (Rand) என்ற நிறுவனமும் ஈடுபட்டிருந்தது. 1965-இல் அதற்கான ஒரு மாதிரிக் கட்டமைப்பை வெளியிட்டது. இதே கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1968-இல் இங்கிலாந்து நாட்டின் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் (National Physics Laboratary) இதுபோன்ற பிணையத்தின் மாதிரியைச் சோதனை முறையில் அமைத்துக் காட்டியது.

இத்தகைய ஆய்வுகளின் இறுதியில் ‘ஆர்ப்பா’வின் முயற்சியால் 1969-இல் இராணுவப் பயன்பாட்டுக்கென அமெரிக்காவில் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்கள் இணைக்கப்பட்டு ‘ஆர்ப்பாநெட்’ (ARPANet) என்கிற அமைப்பு நிறுவப்பட்டது. இதுவே, பிற்கால இணையத்தின் முன்னோடிப் பிணைய அமைப்பாகும்.

இந்த சூழலில் பாஸ்டன் நகரின் எம்ஐடீயில் (MIT – Massachusetts Institute of Technology) பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் லியோனார்டு கிளெய்ன்ராக் என்பார் ஆர்ப்பாநெட்டின் மூலமாக இரு சேய்மைக் கணினிகளுக்கிடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் காட்டினார். இதனால் இவர்,’இணையத்தின் தந்தை’ (Father of Internet) என்று அழைக்கப்படுகிறார்.

இணையத்தின் வளர்ச்சி[தொகு]

1971-இல் ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்ட கணுக்கள் (Nodes) என்னும் பிணைய மையங்களின் எண்ணிக்கையானது பதினைந்தாக அதிகரித்தது. பின் அது 1972-இல் முப்பது கணுக்களாக வளர்ச்சி பெற்றது. ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணினித் தொடர்பு மூலம் பெற முடியும் என்பது செயற்படுத்திக் காட்டப்பட்டது.

அதன்பிறகு, அரசின் வெவ்வேறு துறைகள், பல்கலைக் கழகங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் தங்கள் பிணையங்களை ஆர்ப்பாநெட்டில் இணைத்துக் கொண்டன.

அடுத்ததாக, அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த கணினிகளையும் கணினிப் பிணையங்களையும் அமைத்துச் செயல்பட்டு வந்த சமூகக் குழுக்கள் பல தத்தம் பிணையங்களை ஆர்ப்பாநெட்டுடன் இணைத்துக் கொண்டன. இதன் விளைவாக, ஆர்ப்பாநெட்டின் இராணுவத் தன்மை குறையத் தொடங்கியது.

1983-இல் ஆர்ப்பாநெட்டிலிருந்து அமெரிக்க இராணுவப் பிணையம் ‘மில்நெட்’ (Milnet) என்ற பெயரில் தனியாகப் பிரிக்கப்பட்டுச் செயல்பட ஆரம்பித்தது. அதற்குப்பின், ஆர்ப்பாநெட் பொதுப் பிணையமாகியது.

அறிவியல் ஆய்வுக்கென அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் நிறுவனம் (National Science Foundation) என்எஸ்எஃப்நெட் (NSFNet) என்னும் பிணையத்தைத் தோற்றுவித்தது. இதில் ஐந்து மீத்திறன் கணினி மையங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தகவல் மூலாதாரங்களை அமெரிக்காவிலுள்ள எந்தவொரு கல்வி நிறுவனமும், ஆய்வுக் கூடமும் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

இது 1984-இல் ஆர்ப்பாநெட்டைப் போன்றே நாடு முழுவதும் அளாவத்தக்க வகையில் தம் சொந்தப் பிணையக் கட்டமைப்பை நிறுவியது. ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்ட கணினி மையங்கள் அருகிலுள்ள என்எஸ்எஃப்நெட்டின் மீத்திறன் கணினி மையத்துடன் இணைக்கப்பட்டன.

1988-ஆம் ஆண்டில் என்எஸ்எஃப்நெட் புதுப்பிக்கப்பட்டது. அது மேலும் மேலும் வளர்ச்சிபெறவே, ஆர்ப்பாநெட் தம் முக்கியத்துவத்தை இழந்தது. ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்டிருந்த பல கணினிப் பிணையங்கள் என்எஸ்எஃப்நெட்டுடன் இணைந்தன. இதனால், 1990-இல் ஆர்ப்பாநெட் மறைந்தது. என்எஸ்எஃப்நெட் புதிய இணையமாகச் செயல்படத் தொடங்கியது.

அரசுத் துறையினர், அரசு சார்ந்த நிறுவனங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் முதலானவை தம் சொந்த பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தி வந்த பிணையத்தைப் பிற்காலத்தில் பொதுமக்களும் பயன்படுத்திட என்எஸ்எஃப்நெட் வழிவகுத்தது.

இணையம் வரையறை[தொகு]

International Network என்பதன் சுருக்கமே Internet ஆகும். இணையம் இதன் தமிழ்ச் சொல்லாகும். இணையம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதாகும்.

குவி இணையம்[தொகு]

ஓர் அறையில் அல்லது அலுவலகத்தில் இந்த இணையச் செயற்பாடுகள் நிகழ்வதற்கு குவி இணையம் (LAN Local Area Network) என்று பெயர்.

விரி இணையம்[தொகு]

வெவ்வேறு இடங்களில் உள்ள ஒரு நிறுவனத்தின் கிளைகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதனை விரி இணையம் (WAN Wide Area Network)எனப்படுகிறது.

மின் வணிகம்[தொகு]

இணையம் உதவியோடு நடைபெறும் வணிகம் மின் வணிகம் (e-commerce) எனப்படும். இதில் விளம்பர வசதிகள் உண்டு. குறிப்பிட்ட இணைய தளத்தினை வாடகைக்கு எடுத்தோ, விட்டோ பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தனிநபர் இணைய தளம் உருவாக்கும் வழிமுறைகள்[தொகு]

1. பல்வேறு பெயர்களின் அடிப்படையிலான தளங்கள் ஏற்கனவே பிறரால் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் ஒன்றிரண்டு விருப்பப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு உள்ளீடு செய்து கொள்ளவும். பின்னர், அது உறுதியானதும் அதை ...காம்,...ஆர்க்,...நெட் என்ற முதன்மை புலத்துடன் இணைத்திட வேண்டும்.

எடுத்துக்காட்டு:mani_ganesan.com

2. அடுத்ததாக தெரிவு செய்யப்பட்ட பெயர் முகவரியைச் சோதித்து அவ் இணையதளம் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. இல்லையேல் மாற்று முயற்சி மேற்கொண்டு புதிய பெயரைத் தெரிவு செய்திட வேண்டும்.

3. இதற்குக் கட்டணம் உண்டு. அது நிறுவனங்களுக்கேற்ப மாறுபடும். பல நிறுவனங்கள் நேரடியான மின்வணிக வசதி மூலம் (கடன் அட்டை) உடனடியாகவும் பெயரை பதிவு செய்து தருகின்றன.

4. பெயர் பதிவு செய்து தரும் நிறுவனத்திற்கு இதைச் செய்து முடிக்க 24 மணி நேரம் ஆகக் கூடும். அதன் பிறகு இந்தத் தளம் தனிநபருக்குரிய பெயரில் இயங்கும் இணைய தளமாகச் செயற்படத் தொடங்கும்.

இணையம் எப்படி செயல்படுகின்றது[தொகு]

அடிப்படையில் இணையமானது ஒரு வழங்கி (Server) மற்றும் வாங்கிக்குமான (Client) தகவல் தொடர்பாகும். இந்த தொடர்பானது TCP/IP என்னும் இணைய நெறிமுறை மூலம் நடைபெறுகிறது. பின்வரும் நிகழ்வுகள் ஒரு வாங்கிக்கும் வழங்கிக்கும் நடைபெறுவதாகக் கொள்ளலாம்.

இணையத்தில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் எண்களைக்கொண்டு XXX.XXX.XXX.XXX என்னும் முறையில் அடையாளக் குறியீடு கொடுக்கப்படும். இதனை இணைய விதிமுறை இலக்கம் (IP) என்பர். இத்தகய இலக்கமுறை மனிதன் கையாள்வது சிரமம் என்பதால் 'இடங்குறிப்பி' உரலி இலக்கத்தை குறிக்கப் பயன்படுகிறது. உரலியை கொண்டு இணையத்தில் உள்ள கோப்பை அணுகும் முறையை, களப் பெயர் முறைமை (Domain Name System) என்பர்.

அடுக்குவரிசையான டொமைன் பெயர் முறைமை, மண்டலங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரு பெயர் செர்வரால் சேவையாற்றப்படுகிறது.

வாங்கி என்பது ஒரு உலவியைக் குறிப்பதாகும்.

  • உலகின் ஒரு மூலையில் இருந்து பயனர் உலவியில், உரலியை (ஒருசீர் வள இடங்குறிப்பி) பதிவிடுகிறார் [ எ.கா. : http://ta.wikipedia.org/w/index.php ]
  • உலவியானது உரலியை, தான் நிறுவப்பட்டிருக்கும் கணணியில் இணையவிதிமுறை இலக்கம் (IP Number) தற்காலிக நினைவில் உள்ளதா எனத் தேடுகிறது. இச்சேவையைச் செய்யும் மென்பொருட்களை பொதுவாக Nameserver என்று அழைக்கப்படும்.
  • Nameserver ஒரு வழியாக ta.wikipedia.org ன் இணையவிதிமுறை இலக்கம், 208.80.152.2 என்பதை உலவிக்கு தெரிவிக்கும். இப்படியாக களப் பெயர் முறையில் (Domain Name System) ta.wikipedia.org இருப்பிடம் அறியப்படுகிறது.
  • உலவி இனி 208.80.152.2 முகவரியாகக் கொண்ட வழங்கியை இணையத்தில் தொடர்பு கொள்ள முயலும்.
  • அடுத்து உலவி 208.80.152.2 எண் முகவரிக்கு GET w/index.php HTTP/1.0 என்னும் கட்டளையைப் பிறப்பிக்கும். இக்கட்டளையானது துண்டங்கள் ஆக (Packets) மாற்றப்படும்.

இத்துண்டத்தில் அனுப்புநர் முகவரி (Sender Address), பெறுநர் முகவரி (Receiver Address) மற்றும் படலை (கணினி) (Port) குறிப்பிடப்பட்டிருக்கும். துண்டங்கள் பொதுவாக பின்வருமாறு இருக்கும்.

GET /wiki/இணையம் HTTP/1.1
Host: ta.wikipedia.org
User-Agent: Mozilla/5.0 (X11; Linux i686; rv:5.0) Gecko/20100101 Firefox/5.0
Accept: text/html,application/xhtml+xml,application/xml;q=0.9,*/*;q=0.8
Accept-Language: en-us,en;q=0.5
Accept-Encoding: gzip, deflate
Accept-Charset: ISO-8859-1,utf-8;q=0.7,;q=0.7
DNT: 1
Connection: keep-alive
Pragma: no-cache
Cache-Control: no-cache
  • துண்டங்களை, இயக்கு தளம் ஏற்றுக்கொண்டு, அவற்றை திசைவியிடம் கொடுக்கும்.
  • திசைவி துண்டங்களைப் பெற்று , பிற திசைவிகளுடன் தொடர்பு கொண்டு 208.80.152.2 எண் உள்ள வழங்கியிடம் பயனர் உலவியில் இருந்து பிறப்பிக்கப்பட்ட துண்டங்களை ( GET w/index.php HTTP/1.0 ) சேர்க்கும்.
  • வழங்கி துண்டங்களை ஆய்ந்து /wiki/ என்னும் இடத்தில் உள்ள இணையம் என்னும் கோப்பை அனுப்புவதற்கு தயார் செய்யும்.
  • வழங்கியிடம் இருந்து வந்த துண்டங்களில் Accept-Encoding: gzip, என்னும் துணுக்கு (DATAGRAM) இருப்பதால், வாங்கி gzip வகையாறா கோப்புகளை கையாளும் என புரிந்துகொண்டு இணையம் என்னும் கோப்பை gzip முறையில் மாற்றி அனுப்பும்.gzip முறையில் மாற்றுவதால் கோப்பின் அளவு மிகவும் சுருங்கும்.
  • பின்வரும் தரவுகளை வழங்கி வாங்கிக்கு அனுப்பும்.
HTTP/1.0 200 OK

Date: Sun, 07 Aug 2011 06:48:56 GMT
Server: Apache
Cache-Control: private, s-maxage=0, max-age=0, must-revalidate
Content-Language: ta
Vary: Accept-Encoding,Cookie
Last-Modified: Sun, 07 Aug 2011 06:15:07 GMT
Content-Encoding: gzip
Content-Length: 19003
Content-Type: text/html; charset=UTF-8
X-Cache: MISS from sq61.wikimedia.org, MISS from sq62.wikimedia.org
X-Cache-Lookup: HIT from sq61.wikimedia.org:3128, MISS from sq62.wikimedia.org:80
Connection: keep-alive

<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html lang="ta" dir="ltr" xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<title>இணையம் - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)</title>
 ...
<body>
 ...
</body>
</html>

  • வாங்கி (இங்கு Firefox/5.0 gzip முறையில் பெற்ற இணையம் கோப்பை விரித்து Gecko/20100101 என்னும் வாங்கியின் தலைமையகத்திற்கு அனுப்பும்.
  • Gecko/20100101 வானது, http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd என்ற கோப்பை துணையாகக் கொண்டு, பெறப்பட்ட மீஉரைகளை வாங்கியின் முகப்பிற்குக் கொடுக்கும்.
  • இறுதியாக நமக்கு மீயிணைப்புகள் கொண்ட இணையதளம் தெரிகிறது.

உசாத்துணைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Amogh Dhamdhere. "Internet Traffic Characterization". பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
  2. "A Flaw in the Design". The Washington Post. 30 May 2015 இம் மூலத்தில் இருந்து 8 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201108111512/https://www.washingtonpost.com/sf/business/2015/05/30/net-of-insecurity-part-1/. "The Internet was born of a big idea: Messages could be chopped into chunks, sent through a network in a series of transmissions, then reassembled by destination computers quickly and efficiently. Historians credit seminal insights to Welsh scientist Donald W. Davies and American engineer Paul Baran. ... The most important institutional force ... was the Pentagon's Advanced Research Projects Agency (ARPA) ... as ARPA began work on a groundbreaking computer network, the agency recruited scientists affiliated with the nation's top universities." 
  3. "The Computer History Museum, SRI International, and BBN Celebrate the 40th Anniversary of First ARPANET Transmission, Precursor to Today's Internet". SRI International. 27 October 2009. Archived from the original on March 29, 2019. பார்க்கப்பட்ட நாள் 25 September 2017. But the ARPANET itself had now become an island, with no links to the other networks that had sprung up. By the early 1970s, researchers in France, the UK, and the U.S. began developing ways of connecting networks to each other, a process known as internetworking.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையம்&oldid=3830705" இலிருந்து மீள்விக்கப்பட்டது