இரத்தினக்கல்
இரத்தினக்கல் அல்லது இரத்தினம் (மதிப்புள்ள கல் எனவும் அழைக்கப்படும்) என்பது கனிமத் துண்டு. இது வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு அணிகலன் அல்லது ஏனைய அலங்கரிப்பு செய்ய பயன்படுகின்றது.[1][2] ஆயினும், குறிப்பிட்ட பாறைகள் (வைடூரியம் மற்றும் வேதியியல் பொருட்களான அம்பர் ஆகியவை கனிமங்கள் இல்லை. ஆயினும் அவை அணிகலன் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு இரத்தினக்கல் என்றே கருதப்படுகின்றன.
அனேகமான இரத்தினக்கற்கள் கெட்டியானவை. ஆயினும், சில மென்மையான கனிமங்கள் அவற்றின் பளபளப்பு அல்லது ஏனைய கலைநயமுடைய பெறுமான பெளதீக பண்புகளினால் அணிகலன் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அரிதாகக் கிடைப்பதால் அதன் பண்பினால் இரத்தினக்கல் பெறுமதிமிக்கதாகக் காணப்படுகின்றது. அணிகலனுக்கு அப்பால் இது ஆரம்ப தொல்பழங்காலம் முதல் 19ம் நூற்றாண்டு வரை செதுக்கப்பட்ட இரத்தினக்கலாகவும் கடினகல் செதுக்கு வேலைப்பாடுகளான குவளை போன்ற பெரும் செகுசு கலையாக காணப்பட்டது.
குறிப்புகள் [தொகு]
- ↑ The Oxford Dictionary Online and Webster Online Dictionary
- ↑ Alden, Nancy (2009). Simply Gemstones: Designs for Creating Beaded Gemstone Jewelry. New York: Random House. p. 136. ISBN 978-0-307-45135-4. http://books.google.com/books?id=YWqLSol_bEwC&printsec=frontcover&dq=simply+gemstones+nancy+alden#v=onepage&q&f=false. Retrieved November, 3 2010.