செப்டம்பர் 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 259வது நாளாகும். நெட்டாண்டுகளில் 260வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 106 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
Events[தொகு]
- 1795 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் கேப் டவுண் நகரைக் கைப்பற்றியது.
- 1810 - மிகுவேல் ஹிடால்கோ என்ற மதகுரு மெக்சிகோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.
- 1812 - முதலாம் நெப்போலியன் மொஸ்கோவினுள் நுழைந்ததை அடுத்து ரஷ்ய மக்கள் நள்ளிரவில் நகரை தீயிட்டுக் கொழுத்தினர். மொஸ்கோ நகரம் அடுத்த சில நாட்களில் முற்றாக எரிந்தது.
- 1852 - இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
- 1887 - மென்பந்தாட்டம் முதன் முதலில் சிக்காகோவில் விளையாடப்பட்டது.
- 1908 - ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 1920 - நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்டிடத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
- 1963 - மலாயா, சிங்கப்பூர், மற்றும் போர்ணியோவின் சாபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.
- 1970 - ஜோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் ஹுசெயின் இராணுவ ஆட்சியை அறிவித்தார்.
- 1975 - பப்புவா நியூ கினி, அவுஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.
- 1978 - ஈரானில் டபாஸ் நகரை 7.5 - 7.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1982 - லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1987 - ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.
- 2000 - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.
- 2002 - விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
- 2007 - தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்[தொகு]
- 1916 - எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2004)
- 1923 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் முன்னாள் தலைவர்.
- 1945 - ப. சிதம்பரம், இந்திய அரசியல்வாதி
இறப்புகள்[தொகு]
- 1736 - கப்றியேல் ஃபாரென்ஹைட், ஜேர்மனிய இயற்பியலாளர் (பி. 1686)
- 1824 - பதினெட்டாம் லூயி, பிரான்சின் மன்னன் (பி. 1755)
- 1932 - ரொனால்ட் றொஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1857)
- 1994 - சு. பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் (பி. 1928)
- 1998 - கோ. கேசவன், தமிழியல் ஆய்வாளர் (பி. 1946)
- 2000 - எம். எச். எம். அஷ்ரப் , இலங்கை முஸ்லிம் தலைவர் (பி. 1948)
- 2009 - தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்
சிறப்பு நாள்[தொகு]
- உலக ஓசோன் பாதுகாப்பு நாள்
- மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810)
- பப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975)