சரவாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரவாக்
Sarawak
سراوق
砂拉越
சரவாக்கின் கொடி
Location of சரவாக்கின்
தலைநகரம் கூச்சிங்
வரலாறு
 -  புருணை சுல்தானகம் 19ம் நூற்றாண்டு 
 -  புரூக் வம்சம் 1841 
 -  ஜப்பானிய ஆதிக்கம் 1941-1945 
 -  பிரித்தானிய ஆதிக்கம் 1946 
 -  மலேசியாவுடன் இணைவு 1963 
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 2,500,000 
ம.வ.சு (2000) 0.757 (நடு

சரவாக் (Sarawak) போர்ணியோ தீவில் உள்ள இரண்டு மலேசிய மாநிலங்களில் ஒன்றாகும். மற்றையது சாபா ஆகும். பூமி கென்யாலங் (‘ஹோர்ன்பில்களின் நிலம்’) என அழைக்கப்படும் சரவாக், போர்ணியோ தீவில் வட-மேற்கே அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரும் மாநிலம் இதுவாகும். இரண்டாவது பெரிய மாநிலமான சாபா தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது.

இதன் நிர்வாகத் தலைநகரமான கூச்சிங்கின் மக்கள் தொகை 579,900 (2006 கணக்கெடுப்பின் படி) ஆகும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் முஸ்லிம்-அல்லாதோர் ஆவர். இங்கு கிட்டத்தட்ட 30 மலே அல்லாத பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.

[தொகு] வரலாறு

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்ணியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 17ம் நூற்றாண்டில் சுல்தான் டெங்கா என்பவனால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புருணை சுல்தானகத்தினால் ஆளப்பட்டது. 1841 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இங்கு வந்திறங்கினான். இவன் வந்த காலத்தில் அங்கு தயாக் பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினான். புரூக் சூல்தானுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டான். அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. சுல்தான் 1841, செப்டம்பர் 24 இல் ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநர் ஆக்கினான். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்து அங்கு வெள்ளை ராஜா வம்சத்தை ஏற்படுத்தினான்.

சேர் ஜேம்ஸ் புரூக், சரவாக்கின் ராஜா

1842, ஆகஸ்ட் 18 ஆம் நாள் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டான். அவன் 1868 இல் இறக்கும் வரை சரவாக்கை ஆட்சி செய்தான். அதன் பின்னர் அவனது மருமகன் சார்ல்ஸ் புரூக் 1917 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தான். அவன் இறந்த பின்னர் அவனது மகன் சார்ல்ஸ் வைனர் புரூக் ஆட்சி செய்தான்[1].

புரூக் வம்சம் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தது. இவர்கள் வெள்ளை ராஜாக்கள் எனப்புகழ் பெற்றிருந்தனர். எனினும் பிரித்தானியாவின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போலல்லாமல் சரவாக் ராஜாக்கள் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர். சீன வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும் அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. தாயக் மக்களின் கலாச்சாரத்தில் சீனர்கள் கலப்பதை இராசாக்கள் விரும்பவில்லை. சரவாக் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்கள். இது போர்ணியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.

போர்ணியோ தீவில் சரவாக்கின் அமைவு

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சரவாக்கை முற்றுகையிட்டது. 1941 டிசம்பர் 16 இல் மிரி நகரையும், டிசம்பர் 24 இல் கூச்சிங் நகரையும் கைப்பற்றினர். போர்ணியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1945 இல் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்ணியோவைக் கைப்பற்றினர். ஜூலை 1, 1946 இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தான். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆனாலும், ராஜாவின் மருமகன் அந்தனி புரூக் சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தான். லகப் போரின் முடிவில் நாட்டில் இருந்து தப்பியோடினான். பதினேழு ஆண்டுகளின் பின்னர் சரவாக் மலேசியாவுடன் இணைக்கப்பட்ட போது இவன் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டான். மலே மக்கள் சரவாக் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டமைக்கு பலத்த எதிர்ப்பைக் காட்டினர். சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் படுகொலை செய்யப்பட்டார்.

சரவாக் அதிகாரபூர்வமாக 1963, ஜூலை 22 இல் விடுதலை அடைந்து[2] அதே ஆண்டு செப்டம்பர் 16 இல் மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

[தொகு] மேற்கோள்கள்

  1. [1]
  2. Bernama (2008-07-22). "Reflect On Past Leaders' Struggles, Says Taib". பார்த்த நாள் 2008-07-24.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்&oldid=1073904" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்