சூலை 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
சூலை 11 கிரிகோரியன் ஆண்டின் 192வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 193வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1346 - லக்சம்பேர்க்கின் நான்காம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசன் ஆனான்.
- 1576 - மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்.
- 1735 - புளூட்டோ சூரியனுக்குக் கிட்டவாக ஒன்பதாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்துக்கு இந்நாளில் வந்தாக கணித கணக்கீடுகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.
- 1740 - யூதர்கள் சிறிய ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- 1750 - நோவா ஸ்கோசியாவின் ஹாலிஃபாக்ஸ் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
- 1776 - கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தான்.
- 1796 - மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா "ஜே உடன்படிக்கை"யின் படி பெற்றுக் கொண்டனர்.
- 1811 - வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.
- 1859 - இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்ல்ஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வாஷிங்டன் டிசியைத் தாக்க முயற்சித்தனர்.
- 1882 - பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1893 - முதன் முறையாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.
- 1895 - லூமியேர சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படம் ஒன்றைக் காண்பித்தனர்.
- 1897 - வட முனைக்கு வாயுக்குண்டு மூலம் செல்லுவதற்காக சாலமன் அண்டிரே நோர்வேயின் ஸ்பிட்ஸ்பேர்ஜன் தீவிலிருந்து புறப்பட்டார். ஆனாலும் வாயுக்குண்டு தரையில் மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.
- 1921 - மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.
- 1936 - நியூயோர்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.
- 1943 - போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1973 - பிறேசில் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
- 1978 - ஸ்பெயினில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.
- 1979 - ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்குத் திரும்பியது.
- 1982 - இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.
- 1987 - உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.
- 1990 - கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.
- 1991 - ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.
- 1995 - சேர்பிய இராணுவம் பொஸ்னிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2006 - மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.
பிறப்புகள்[தொகு]
- 1767 - ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
- 1920 - வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)
- 1966 - பாலா, தமிழ் திரைப்பட இயக்குனர்
இறப்புகள்[தொகு]
- 1974 - பியார் லாஜர்க்விஸ்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891)