நவம்பர் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
நவம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 308வது நாளாகும். நெட்டாண்டுகளில் 309வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1333 - ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.
- 1576 - ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
- 1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
- 1914 - பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.
- 1918 - முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.
- 1918 - 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.
- 1921 - ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1956 - அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
- 1966 - இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
- 1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
- 1979 - ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
- 1984 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
- 1995 - இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2004 - ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்[தொகு]
இறப்புகள்[தொகு]
- 1988 - ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)
- 1995 - இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)