பெப்ரவரி 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | பெப்ரவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | ||
| MMXIII | ||||||
பெப்ரவரி 22 கிரிகோரியன் ஆண்டின் 53 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1495 - பிரான்ஸ் மன்னன் எட்டாம் சார்ல்ஸ் நேப்பில்சை அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான்.
- 1658 - டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.
- 1819 - ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.
- 1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.
- 1848 - பாரிசில், லூயி பிலிப் மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
- 1853 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1862 - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1882 - சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.
- 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவானது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.
- 1943 - நாசி ஜெர்மனியில் வைட் ரோஸ் இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர்.
- 1948 - செக்கோசிலவாக்கியா கம்யூனிசப் புரட்சி இடம்பெற்றது.
- 1958 - எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.
- 1961 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
- 1969 - பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
- 1974 - சாமுவேல் பிக் ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனைக் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
- 1979 - சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 2002 - அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாஸ் சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
- 2002 - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கைச்சாத்திடப்பட்டது.
- 2006 - பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1732 - ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் (இ. 1799)
- 1824 - பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (இ. 1907)
- 1857 - பேடன் பவல், சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941)
- 1879 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1947)
- 1914 - ரெனாட்டோ டுல்பெக்கோ, உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்
- 1932 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (இ. 2009)
- 1936 - மைக்கேல் பிஷப், உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்
- 1938 - கோவை மகேசன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர், நாட்டுப்பற்றாளர் (இ. 1992)
- 1962 - ஸ்டீவ் இர்வின் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர் (இ. 2006)
- 1963 - விஜய் சிங், கோல்ஃப் விளையாட்டு வீரர்
இறப்புகள் [தொகு]
- 1556 - ஹுமாயூன், முகலாயப் பேரரசன் (பி. 1508)
- 1944 - கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869)
- 1987 - அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர் (பி. 1928)
- 2006 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915)
சிறப்பு நாள் [தொகு]
- சென் லூசியா - விடுதலை நாள் (1979)
- புனித பேதுரு திருவிழா