சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே | |
| படிமம்:Jean Peltier by Antoine Maurin.jpg | |
| பிறப்பு | பெப்ரவரி 22, 1785 ஹாம், பிரான்சு |
|---|---|
| இறப்பு | அக்டோபர் 27 1845 (அகவை 60) பாரிசு, பிரான்சு |
| பணி | இயற்பியலாளர் |
சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே (Jean Charles Athanase Peltier, பெப்ரவரி 22, 1785 - அக்டோபர் 27, 1845) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 1834 ஆம் ஆண்டு இரு வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது, உலோகங்களின் ஒரு சந்தியில் வெப்பம் உமிழப்படும், மற்றொன்றில் வெப்பம் உட்கவரப்படும் எனக் கண்டறிந்தார். இதுவே பெல்டியர் விளைவு எனப்படுகிறது.