1853
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1820கள் 1830கள் 1840கள் - 1850கள் - 1860கள் 1870கள் 1880கள் |
| ஆண்டுகள்: | 1850 1851 1852 - 1853 - 1854 1855 1856 |
| 1853 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1853 MDCCCLIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1884 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2606 |
| சீன நாட்காட்டி | 4549-4550 |
| எபிரேய நாட்காட்டி | 5612-5613 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1908-1909 1775-1776 4954-4955 |
| இரானிய நாட்காட்டி | 1231-1232 |
| இசுலாமிய நாட்காட்டி | 1269 – 1270 |
| ரூனிக் நாட்காட்டி | 2103
|
1853 (MDCCCLIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி - யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையில் சென் பீட்டர்ஸ் பாடசாலை (கில்னர் கல்லூரி) பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 12 - டாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தன.
- பெப்ரவரி 22 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
- மே 6 - யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை என்பவரால் த லிற்றரறி மகசின் (the Literary Magazine) என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 12 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
- அக்டோபர் 4 - ஒட்டோமான் பேரரசு ரஷ்யா மீது போரை அறிவித்தது.
- நவம்பர் - யாழ்ப்பாணத்தில் காலரா பரவியது.
- நவம்பர் 30 - பவெல் நகீமொவ் தலைமையில் ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஒஸ்மன் பாஷா தலைமையிலான ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தனர்
நாள் அறியப்படாதவை [தொகு]
- டொனால்ட் மக்கே என்பவர் "பாரிய குடியரசு" (Great Republic) என்ற உலகின் மிகப்பெரும் கப்பலைக் கட்டினார்.
- தொடர்வண்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் கோப்பாய் சி.எம்.எஸ். தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- செப்டம்பர் 14 - சேர் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1924)