செப்டம்பர் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 248வது நாளாகும். நெட்டாண்டுகளில் 249வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1666 - லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர்.
- 1698 - ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி அறவிட உத்தரவிட்டான்.
- 1799 - பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
- 1800 - மோல்டா பிரித்தானியாவினால் பிடிக்கப்பட்டது.
- 1839 - முதலாவது ஓப்பியம் போர் சீனாவில் ஆரம்பமானது.
- 1880 ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
- 1881 - மிச்சிகனில் இடம்பெற்ற தீயினால் மில்லியன் ஏக்கர்கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.
- 1882 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
- 1887 - இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
- 1902 - இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
- 1905 - ரஷ்ய-ஜப்பானியப் போர்: அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்ஷயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
- 1914 - முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
- 1932 - பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா போரில் தனது நடுநிலையை அறிவித்தது.
- 1961 - அணிசேரா நாடுகளின் முத்லாவது மாநாடு பெல்கிறேட்டில் இடம்பெற்றது.
- 1969 - மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ லெப். வில்லியம் கலி 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
- 1972 - ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
- 1977 - வொயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1978 - காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இஸ்ரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
- 1980 - உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
- 1986 - அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
- 1990 - மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2005 - சுமாத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1872 - வ. உ. சிதம்பரம் பிள்ளை, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1938)
- 1888 - சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1975)
- 1945 - மு. மேத்தா, கவிஞர்
- 1950 - வீரசிங்கம் துருவசங்கரி, இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் (இ. 2006)
இறப்புகள் [தொகு]
- 1997 - அன்னை தெரேசா, (பி 1910)