ஜூன் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூன் 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 4 கிரிகோரியன் ஆண்டின் 155ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 156ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 210 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- கிமு 780 - முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
- 1039 - மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான்.
- 1584 - சேர் வால்ட்டர் ரேலி முதலாவது ஆங்கிலக் குடியேற்றத்தை வட கரோலினாவின் ரோனோக் தீவில் அமைத்தார்.
- 1707 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் ஒல்லாந்தரினால் அமுல்படுத்தப்பட்டது.
- 1794 - பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.
- 1878 - ஓட்டோமான் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.
- 1917 - முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.
- 1928 - சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் ஜப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1939 - 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த அகதிகளில் பெரும்பாலானோர் பின்னர் ஜெர்மனியின் நாசி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் என்ற இடத்தில் இருந்த 300,000 பிரித்தானியப் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டனர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படைகள் பாரிஸ் நகரைனுள் நுழைந்தனர்.
- 1943 - ஆர்ஜெண்டீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச அணிகளிடம் வீழ்ந்தது.
- 1970 - தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1973 - ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் பெற்றனர்.
- 1979 - கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
- 1987 - பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.
- 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1989 - போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.
- 1989 - ரஷ்யாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை வாயுக் குழாய் ஒன்றைக் கடக்கையில் இடம்பெற்ற விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 - அரச மாளிகையில் ஜூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து கயானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.
பிறப்புகள்[தொகு]
- 1910 - கிறிஸ்தோபர் கொக்கரல், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1999)
- 1946 - எஸ். பி. பாலசுப்ரமணியம், இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்
- 1959 - அனில் அம்பானி, இந்தியத் தொழில் அதிபர்
- 1887 - பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)
இறப்புகள்[தொகு]
- 1925 - வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1881)
- 2001 - தீபேந்திரா, நேபாள மன்னர் (பி. 1971)