1802
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1770கள் 1780கள் 1790கள் - 1800கள் - 1810கள் 1820கள் 1830கள் |
| ஆண்டுகள்: | 1799 1800 1801 - 1802 - 1803 1804 1805 |
| 1802 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1802 MDCCCII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1833 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2555 |
| சீன நாட்காட்டி | 4498-4499 |
| எபிரேய நாட்காட்டி | 5561-5562 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1857-1858 1724-1725 4903-4904 |
| இரானிய நாட்காட்டி | 1180-1181 |
| இசுலாமிய நாட்காட்டி | 1216 – 1217 |
| ரூனிக் நாட்காட்டி | 2052
|
| விக்கி ஊடக நடுவத்தில் 1802 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
1802 (MDCCCII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- சனவரி 1 - இலங்கை சென்னை மாகாண ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு இங்கிலாந்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- மார்ச் 15 - இலங்கையின் அரச வர்த்தமானி முதன் முதலாக வெளியிடப்பட்டது.
- மார்ச் 27 - இலங்கையில் உள்ள அனைத்து டச்சு உடைமைகளையும் பிரித்தானியரிடம் கையளிக்கும் ஏமியன்சு உடன்பாடு (Treaty of Amiens) கையெழுத்திடப்பட்டது.
- மார்ச் 28 – எச். டபிள்யு. ஓல்பர்ஸ் என்பவர் பலாசு என்ற சிறுகோள் ஒன்றைக் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 10 – இந்தியாவில் முதன் முதலாக பிரித்தானிய எல்லைகளை நிர்ணயிக்கும் பெரும் திரிகோண மதிப்பீடு (Great Trigonometric Survey of India) மதராசு மாகாணத்தில் ஆரம்பமானது.
- மே 20 – பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைத்தனத்தைக் கொண்டு வரும் சட்டமூலத்தை நெப்போலியன் பொனபார்ட் கொண்டு வந்தான்.
- சூன் 2 - ஆத்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றத்தை எதிர்த்த பழங்குடித் தலைவர் புமுல்வே என்பவர் ஹென்றி ஹாக்கிங் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஆகத்து 6 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி மயிலப்பன் சேர்வைகாரர் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 2 – சுவீடனுக்கும் திரிப்பொலிக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் - பிரெஞ்சு இராணுவம் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தது.
நாள் அறியப்படாதவை [தொகு]
- உயிரியல் என்ற சொல்லை முதன் முதலில் டிரெவிரானசு என்பவர் பயன்படுத்தினார்.
- வெற்றிகரமான முதலாவது நீராவிக் கப்பலை வில்லியம் சிமிங்டன் என்பவர் நிர்மாணித்தார்.
- வியட்நாமில் நியூவென் வம்சம் அரசாளத் தொடங்கியது.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- ஆகத்து 6 - மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி