செப்டம்பர் 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 251வது நாளாகும். நெட்டாண்டுகளில் 252வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 114 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 70 - டைட்டஸ் தலைமையிலான ரோமப் பேரரசின் படையினர் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
- 1514 - லித்துவேனியா, மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.
- 1655 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.
- 1727 - இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
- 1796 - பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1831 - 4ம் வில்லியம் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான்.
- 1888 - லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
- 1900 - டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1923 - கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.
- 1926 – நாடுகளின் கூட்டமைப்பில் செருமனி சேர்ந்தது.
- 1930 - ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.
- 1934 - நியூ ஜேர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரை ஜேர்மனி முற்றுகையிட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி போரில் சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: வி2 ராக்கெட் மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.
- 1945 - சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.
- 1951 - பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.
- 1959 - ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்கொக் நகரில் நிறுவப்பட்டது.
- 1991 - யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.
- 2006 - ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பிறப்புக்கள் [தொகு]
- கி.மு.20/19 - கன்னி மரியா, இயேசு கிறிஸ்துவின் தாய்
- 1913 - ஆர். மகாதேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (இ. 1957)
- 1933 - ஆஷா போஸ்லே, இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி
இறப்புகள் [தொகு]
- 1980 - வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
- 1995 - நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (பி. 1918)
- 2008 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1935)
சிறப்பு நாள் [தொகு]
- மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)
- உலக எழுத்தறிவு நாள்
- அன்னை வேளாங்கண்ணி தேர்த்திருவிழா
- இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாள் பிறப்பு