செப்டம்பர் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 263வது நாளாகும். நெட்டாண்டுகளில் 264வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1187 - சலாதின் ஜெருசலேம் மீதான தாக்குதலை ஆரம்பித்தான்.
- 1519 - பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
- 1633 - சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார்.
- 1697 - ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், புனித ரோமப் பேரரசு டச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1847 - நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.
- 1854 - பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படையினர் கிறிமியாவில் இடம்பெற்ற போரில் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர்.
- 1857 - கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு வந்தது.
- 1878 - த ஹிண்டு இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
- 1932 - மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
- 1942 - உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
- 1945 - மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
- 1966 - சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
- 1976 - துருக்கியில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 155 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1977 - வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது.
- 1979 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பேரரசன் முதலாம் பொக்காசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1984 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
- 1993 - துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- 1933 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847)
- 1971 - ஜியோர்கஸ் செபெரிஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1900)
- 1975 - சென் ஜோன் பேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- 1996 - பால் ஏர்டோசு, அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர் (பி. 1913)