மத்திய ஆபிரிக்கக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
République Centrafricaine
Ködörösêse tî Bêafrîka
மத்திய ஆபிரிக்கக் குடியரசு
மத்திய ஆபிரிக்கக் குடியரசு கொடி மத்திய ஆபிரிக்கக் குடியரசு Emblem
குறிக்கோள்
"Unité, Dignité, Travail"  (பிரெஞ்சு)
"ஒற்றுமை, கண்ணியம், பணி"
நாட்டுப்பண்
La Renaissance  (பிரெஞ்சு)
E Zingo  (சாங்கோ)
Location of மத்திய ஆபிரிக்கக் குடியரசு
தலைநகரம்
பெரிய நகரம்
பாங்கி
4°22′N, 18°35′E
ஆட்சி மொழி(கள்) சாங்கோ, பிரெஞ்சு
அரசு குடியரசு
 -  அதிபர் பிரான்சுவா பொசீசெ
 -  தலைமை அமைச்சர் ஏலி டோட்டே
விடுதலை பிரான்சிடம் இருந்து 
 -  நாள் ஆகஸ்ட் 13, 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 6,22,984 கிமீ² (43வது)
2,40,534 சது. மை 
 -  நீர் (%) 0
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 4,216,666 (124வது)
 -  2003 குடிமதிப்பு 3,895,150 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $5.015 பில்லியன் (153வது)
 -  நபர்வரி $1,198 (167வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $1,488 பில்லியன் (153வது)
 -  நபர்வரி $355 (160வது)
ம.வ.சு (2004) 0.353 (குறைவு) (172வது)
நாணயம் பிராங்க் (XAF)
நேர வலயம் மே.ஆ.நே (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+1)
இணைய குறி .cf
தொலைபேசி +236

மத்திய ஆபிரிக்கக் குடியரசு (அல்லது நடு ஆப்பிரிக்கக் குடியரசு, Central African Republic, பிரெஞ்சு: République Centrafricaine, IPA: ʀepyblik sɑ̃tʀafʀikɛn/ அல்லது Centrafrique IPA: /sɑ̃tʀafʀik/) மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே சாட், கிழக்கே சூடான், தெற்கே கொங்கோ குடியரசு மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மேற்கே கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

இந்நாட்டின் பெரும்பகுதி சூடான்-குயினியன் புல்புதற்காடுகளால் ஆனது. ஆனால் வடக்கே சஹெலோ-சுடான் நிலமும் தெற்கே நடுவரைக் கோட்டு காடுகளும் உள்ளன. கொங்கோ ஆற்றில் பாயும் உபாங்கி ஆற்றின் கரைகளில் இந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ளது. மீதி ஒரு பங்கு சாரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. இதனால் இந்நாட்டை ஆண்ட பிரெஞ்சுக்காரர் இதனை உபாங்கி-சாரி என அழைத்தனர். சாரி ஆறு வடக்கே பாய்ந்து சாட் ஏரியுள் கலக்கின்றது.

மத்திய ஆபிரிக்கக் குடியரசும் அதன் எல்லை நாடுகளும்

பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த இந்நாடு ஆகஸ்ட் 13, 1960 இல் விடுதலை பெற்றது. விடுதலை அடைந்த நாளிலிருந்து மூன்று தசாப்த காலமாக இந்நாட்டை மக்களால் சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படாத அதிபர்களே ஆட்சி நடத்தினர். 1993 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் Ange-Félix Patassé என்பவர் அதிபரானார். 2003 இல் பிரெஞ்சு ஆதரவு பெற்ற புரட்சி மூலம் இராணுவ ஜெனரல் பிரான்சுவா பொசிசே ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் மே 2005 இல் நிகழ்ந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்று இன்று வரை அதிபராயுள்ளார்.

மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகவும், ஆபிரிக்காவின் 10 வறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் 43வது பெரிய நாடாகும். இதன் மக்கள் தொகை 4,303,356 ஆகும். இவர்களில் 11 விழுக்காடு எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.[1]

80 இனக் குழுக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். அனைத்து இனக்குழுக்களும் தமது மொழியைக் கொண்டுள்ளன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்