கோட் டிவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
République de Côte d'Ivoire
கோட் டி'வார் குடியரசு
கோட் டி'வார் கொடி
குறிக்கோள்
"ஐக்கியம், கட்டுப்பாடு, தொழில்"
நாட்டுப்பண்
L'Abidjanaise
Location of கோட் டி'வார்
தலைநகரம் யமுசூக்குரோ (de jure)
அபிட்ஜான் (de facto)
6°51′N 5°18′W / 6.85, -5.3
பெரிய நகரம் அபிட்ஜான்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசு குடியரசு
 -  அதிபர் லோரண்ட் குபாக்போ[1]
 -  தலைமை அமைச்சர் கில்லாமி சோரோ[1]
விடுதலை பிரான்சிடம் இருந்து 
 -  தேதி ஆகஸ்ட் 7, 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 3,22,460 கிமீ² (68வது)
1,24,502 சது. மை 
 -  நீர் (%) 1.4[2]
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 17,654,843a[2] (57வது)
 -  1988 குடிமதிப்பு 10,815,694[3] 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $28.47 பில்லியன்[2] (98வது)
 -  நபர்வரி $1,600[2] (157வது)
ம.வ.சு (2006) 0.421[4] (low) (164வது)
நாணயம் CFA பிராங்க் (XOF)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.+0)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+0)
இணைய குறி .ci
தொலைபேசி +225[5]

கோட் டிவார் (Côte d'Ivoire, ஆங்கிலம்: koʊt div'wɑːr, பிரெஞ்சு: ˌkot div'waʀ)) மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.

இந்நாட்டின் ஆரம்ப கால வரலாறு அறியப்படவில்லையெனினும் நியோலித்திக் கலாசாரம் இங்கு இருந்திருப்பதாகத் தெரிகிறது. 19ம் நூற்றாண்டில் ஆக்கான்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1893 இல் பிரெஞ்சுக் காலனித்துவ நாடாக்கப்பட்டது. 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1993 வரையில் பீலிக்ஸ் ஹுஃபொயே போய்னி என்பவரின் ஆட்சியில் இருந்தது. இக்காலத்தில் தனது அயல் மேற்கு ஆபிரிக்க நாடுகளுடனும் மேற்கத்திய நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தது. இதனால் இந்நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் திரத்தன்மை காணப்பட்டது. ஆனாலும் ஹுஃபொயே போய்னியின் ஆட்சிக்குப் பின்னர் 1999, 2001 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டு இராணுவப் புரட்சி, மற்றும் 2002ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினாலும் நாட்டின் திரத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.[6]

இதன் உத்தியோகபூர்வ தலைநகராக யமுசூக்குரோவும், அதிகாரபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழியும் உள்ளன. 19 பிரிவுகளாகவும் 58 பகுதிகளாகவும் நாடு பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்திலேயே தங்கியுள்ளது.[2]

ஐவரி கோஸ்டின் வரைபடம்

[தொகு] வெளி இணைப்புகள்

  1. 1.0 1.1 "FACTBOX-Key facts on rebel leader Guillaume Soro". AlertNet.org. Reuters Foundation (2007-03-29). பார்த்த நாள் 2007-04-01.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Côte d'Ivoire in CIA உலகத் தரவுகள். அணுகப்பட்டது ஜனவரி 1], 2007.
  3. United Nations: Demographic Yearbook, Historical supplement. Accessed January 1, 2006.
  4. undp.org. அணுகப்பட்டது ஜனவரி 1, 2006.
  5. "List of ITU-T Recommendation E.164 assigned country codes" (PDF) 3. International telecommunication union. பார்த்த நாள் 2006-09-25.
  6. பின்குறிப்பு: கோட் டிவார். அணுகப்பட்டது ஜனவரி 1, 2007.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோட்_டிவார்&oldid=1110364" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்