மொசாம்பிக்
| República de Moçambique
மொசாம்பிக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் இல்லை |
||||||
| நாட்டுப்பண் Pátria Amada (முன்னர் Viva, Viva a FRELIMO) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
மபூட்டோ |
|||||
| ஆட்சி மொழி(கள்) | போர்த்துகீசம் | |||||
| மக்கள் | மொசாம்பிக்கன் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | அர்மாண்டோ குயெபுசா | ||||
| - | தலைமை அமைச்சர் | லுயிசா டியொகோ | ||||
| விடுதலை | ||||||
| - | போர்த்துக்கல் இடமிருந்து | ஜூன் 25 1975 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 8,01,590 கிமீ² (35வது) 3,09,496 சது. மை |
||||
| - | நீர் (%) | 2.2 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 குடிமதிப்பு | 21,397,000 (52வது) | ||||
| - | அடர்த்தி | 25/கிமீ² (178வது) 65/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $27.013 பில்லியன் (100வது) | ||||
| - | நபர்வரி | $1,389 (158வது) | ||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | மொசாம்பிக்க மெடிகால் (Mtn) (MZN) |
|||||
| நேர வலயம் | CAT (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கடைப்பிடிப்பதில்லை (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .mz | |||||
| தொலைபேசி | +258 | |||||
| 1 | இந்நாட்டுக்கான மதிப்பீடுகள், எய்ட்ஸ் காரணமாக எழும் அளவு கூடிய உயிரிழப்புகளைக் கணக்கில் கொள்கின்றன. இதனால், குறைவான வாழ்நாள் எதிர்ப்பார்ப்பு திறன், கூடுதல் குழந்தைகள் இறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், குறைவான மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி விகிதங்கள், வயது மற்றும் பால் வாரியான மக்கள் தொகைப் பரம்பல் கணக்கில் மாறுதல்களை எதிர்ப்பார்க்கலாம். | |||||
மொசாம்பிக் என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு (போர்த்துகீசம்: República de Moçambique, pron. IPA: [ʁɛ'publikɐ dɨ musɐ̃'bikɨ]), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.
போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. Muça Alebique, என்ற சுல்தானின் பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.