உள்ளடக்கத்துக்குச் செல்

மொரிசியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொரிசியசு குடியரசு
Republic of Mauritius
République de Maurice
கொடி of மொரிசியசின்
கொடி
சின்னம் of மொரிசியசின்
சின்னம்
குறிக்கோள்: "Stella Clavisque Maris Indici"  (இலத்தீன்)
"இந்தியப் பெருங்கடலின் நட்சத்திரமும் சாவியும்"
நாட்டுப்பண்: அன்னைபூமி
மொரிசியசின்அமைவிடம்
தலைநகரம்போர்ட் லூயிஸ்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்1
பிராந்திய மொழிகள்மொரிசியசு கிரெயோல், பிரெஞ்சு, இந்தி, உருது, தமிழ், மாண்டரீன், தெலுங்கு, போஜ்புரி
மக்கள்மொரிசியர்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• சனாதிபதி
அமீனா குரிப் பாகிம்
• தலைமை அமைச்சர்
நவின்சந்திரா ராம்கூலம்
விடுதலை 
• நாள்
மார்ச் 12, 1968
• குடியரசு
மார்ச் 12, 1992
பரப்பு
• மொத்தம்
2,040 km2 (790 sq mi) (179வது)
• நீர் (%)
0.05
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
1,288,0002 (151வது)
• 2000 கணக்கெடுப்பு
1,179,137
• அடர்த்தி
631.4/km2 (1,635.3/sq mi) (18வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2010 மதிப்பீடு
• மொத்தம்
$18.061 பில்லியன் (119வது)
• தலைவிகிதம்
$14,097 (51வது)
மமேசு (2010)Increase 0.701
Error: Invalid HDI value · 72வது
நாணயம்மொரிசியசு ரூபாய் (MUR)
நேர வலயம்ஒ.அ.நே+4 (மொரிசியசு நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+4 (அவதானிப்பில் இல்லை)
அழைப்புக்குறி230
இணையக் குறி.mu
  1. [1][2]
  2. The population estimate is for the whole republic. For the island of Mauritius only, as at 31 December 2006, it is 1,219,220[3]

மொரிசியசு அல்லது மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியசு தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக்கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன.

நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். 1968ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.

மொரிசியசானது டோடோ பறவைகளின் அறியப்பட்ட ஒரே தாயகமாகும். இதன் நிறையினாலும், பறக்கமுடியாத தன்மையினாலும் குடியேற்றக்காரர்களின் இலகுவான உணவாக மாறியது. இதனால் முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் இது இனமழிந்து போனது.

வரலாறு

[தொகு]

மொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1507ல் போர்த்துக்கேயர் இங்கு ஒரு தளத்தை அமைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய கடலோடி தொன் பேதுரு மசுகரன்காசு, மொரீசியசு, ரொட்ரிக்சு, ரியூனியன் ஆகிய தீவுகளடங்கிய தீவுக்கூட்டத்துக்கு மசுகரீன்சு எனப் பெயரிட்டார். எனினும் போர்த்துக்கேயர் இத்தீவுகளில் அக்கறை காட்டவில்லை.

1598ல் அட்மிரல் வைபிராண்ட வான் வார்விக் தலைமையிலான ஒரு டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. பின் அத்தீவு ஒல்லாந்தின் தலைவரான மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிசியசு எனப்பட்டது. எனினும் 1638லேயே முதலாவது டச்சுக் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அது அவுஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்ட புகழ்பெற்ற டச்சுக் கடலோடியான தஸ்மனால் அமைக்கப்பட்டது. முதலாவது டச்சுக் குடியேற்றம் 20 வருடங்களே நீடித்தது.

ஏற்கனவே ரியூனியனின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பிரான்சு 1715ல் மொரிசியசைக் கைப்பற்றியது. 1735ல் பிரெஞ்சு ஆளுநரான மாகே டி லா போர்டோநெய்சின் வருகையுடன் சீனி உற்பத்தியினால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இவர் போர்ட் லூயிசை கப்பற்படைத்தளமாகவும் கப்பல் கட்டும் மையமாகவும் உருவாக்கினார். இவரது ஆளுகையின் கீழ் பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டன. 1767 வரை மொரிசியசு பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியால் ஆளப்பட்டது.

1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியசு 1968ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.

மொரிசியசிஸ் தமிழர்கள்

[தொகு]

மொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மொரிசியசு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும் எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

வெளியுறவு

[தொகு]

மொரிசியஸ் அதன் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடனே உள்ளது. அதன் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி போர் கப்பல் ஒன்றை அர்ப்பணித்தார். [4]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Republic of Mauritius, Government Portal (Mauritius)". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2008-03-29.
  2. "The Constitution". Archived from the original on 2011-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-03-29.
  3. "Population and Vital Statistics, Republic of Mauritius, Year 2006 - Highlights". Central Statistics Office (Mauritius). March 2007. Archived from the original on 2007-03-26. பார்க்கப்பட்ட நாள் 2007-03-18.
  4. மொரீஷியஸுக்கு இந்திய போர்க்கப்பலை அர்ப்பணித்த மோடி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரிசியசு&oldid=4167658" இலிருந்து மீள்விக்கப்பட்டது