மொரிசியசில் அரசியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொரிசியசில் அரசியல் மக்களை அடிப்படையாகக் கொண்டது. மக்களாட்சியின் அடிப்படையிலான நாடாளுமன்றத்தைக் கொண்டது. மொரிசியசு அரசு மூன்று பிரிவுகளைக் கொண்டது. அவை சட்ட ஆக்கத் துறை, நீதித் துறை, செயலாக்கத் துறை ஆகியன. இந்த அமைப்பு மொரிசியசு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது. மொரிசியசு அரசாங்கத்தின் தலைவராக குடியரசுத் தலைவர் இருப்பார். ஆனால், மொரிசியசின் பிரதமர் முழு அதிகாரத்தையும் கொண்டிருப்பார். இவருடன் பல்வேறு துறை அமைச்சர்கள் இருப்பர். மொரிசியசு பல கட்சிகளைக் கொண்டது.[1]

சட்டவாக்கத் துறை[தொகு]

தேசிய சட்டமன்றத்தினரால் குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் நீடிப்பர். சட்டத்துடன் தொடர்புடைய அனைத்து முடிவுகளும் தேசிய சட்டமன்றத்துக்கு கட்டுப்பட்டவை. இது சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் உயரிய அமைப்பாகும். அமைச்சர்களும், எதிர்க்கட்சித் தலைவரும், பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து, சட்டங்களை உருவாக்கியும், திருத்தவும் முடியும்.

செயலாக்கத் துறை[தொகு]

குடியரசுத் தலைவரே பிரதமரையும், பிற அமைச்சர்களையும் நியமிப்பார். அமைச்சர்களுக்கு அரசை நடத்தும் பொறுப்பு இருக்கும். இவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

முக்கியத்துவம்[தொகு]

மொரிசியசு அரசில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் வரிசைப்படி தரப்பட்டுள்ளது.[2]

  1. குடியரசுத் தலைவர்
  2. பிரதமர்
  3. துணை குடியரசுத் தலைவர்
  4. துணை பிரதமர்
  5. உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி
  6. தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர்
  7. எதிர்க்கட்சித் தலைவர்
  8. முன்னாள் குடியரசுத் தலைவர்கள்
  9. முன்னாள் பிரதமர்கள்
  10. முன்னாள் துணை பிரதமர்கள்
  11. அமைச்சர்கள்
  12. முன்னாள் துணை குடியரசுத் தலைவர்
  13. முதன்மை அரசு அதிகாரி
  14. ரோட்ரிக்சின் முதன்மை ஆணையர்
  15. நாடாளுமன்றத்தின் செயலாளர்கள்
  16. அமைச்சரவையின் செயலாளர்கள், குடிமைப் பணித் தலைவர்
  17. நிதித்துறை, உள்துறை, வெளிவிவகாரங்கள் துறை ஆகியவற்றின் செயலாளர்கள்

நீதித் துறை[தொகு]

மொரிசியசின் சட்டம் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைந்தது. உச்ச நீதிமன்றமே நீதி வழங்குவதற்கான உயரிய அமைப்பாகும். இது தலைமை நீதிபதியையும், ஐந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "FAQs - What is the political system in Mauritius ?". Government of Mauritius இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130102042531/http://www.gov.mu/portal/site/citizenhomepage/menuitem.3585e7c5797e1a22b612e3a3a0508a0c/. பார்த்த நாள்: 5 January 2013. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-21.
  3. Parvèz A. C. Dookhy, "Le Comité Judiciaire du Conseil Privé de la Reine Elisabeth II d'Angleterre et le Droit Mauricien", PhD dissertation, University of Paris 1 Pantheon-Sorbonne, 26 February 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரிசியசில்_அரசியல்&oldid=3569058" இலிருந்து மீள்விக்கப்பட்டது