சூன் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஜூன் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXII | ||||||
சூன் 2 கிரிகோரியன் ஆண்டின் 153ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 154ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1615 - பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
- 1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1924 - ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.
- 1946 - இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான்.
- 1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
- 1965 - வியட்நாம் போர்: முதலாவது தொகுதி அவுஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது.
- 1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
- 1992 - டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்.
- 1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2003 - வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது.
[தொகு] பிறப்புகள்
- 1943 - இளையராஜா, இந்திய இசையமைப்பாளர்.
- 1956 - மணிரத்னம், தமிழ் இயக்குனர்.
- 1965 - ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா, ஆஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர்கள்.
[தொகு] இறப்புகள்
- 1842 - பி. கந்தப்பிள்ளை, (ஆராய்ச்சிக் கந்தர்), யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை.
- 1882 - கரிபால்டி, நவீன இத்தாலியை உருவாக்கியவர். (பி. 1807)
- 1981 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத் தமிழறிஞர் (பி. 1907)