நந்தன் நிலெக்கணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நந்தன் எம்.நிலெக்கணி
பிறப்பு சூன் 2, 1955 (1955-06-02) (அகவை 56)
பெங்களூரு,கர்நாடகம், இந்தியா
பணி தலைவர், இந்தியத் தனி அடையாள ஆணையம்(UIDAI)
சம்பளம் $203,545(இன்போசிஸில் 2007 நிகர இழப்பீடு)[1]
சொத்து மதிப்பு $1.3 பில்லியன் அமெரிக்க டாலர்
வாழ்க்கைத் துணை ரோகிணி

நந்தன் எம். நிலெக்கணி (Nandan Nilekani கொங்கணி/கன்னட வரிவடிவில்: ನಂದನ ನಿಲೇಕಣಿ)(பிறப்பு: ஜூன் 2,1955) இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை யடுத்து ஜூலை 9, 2009 ஆம் ஆண்டு இன்போசிஸ் பதவியை துறந்தார்.

இந்திய அரசு, அவரது பங்காற்றலை பாராட்டி நாட்டின் உயரிய விருதாகிய பத்ம பூசன் விருதை 2006 ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.

[தொகு] இளமை

திரு நந்தன் நிலெக்கணி, 1955ம் ஆண்டு ஜூன் திங்கள் 2ஆம் நாள் பெங்களூருவில் துர்கா மற்றும் மோகன் ராவ் நிலெக்கணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரூவின் பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் படித்து 1978இல் மின் பொறியியல் பட்டத்தை இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையில் பெற்றார்.[2]

படித்து முடித்தவுடன் மும்பையிலிருந்த பத்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு தொழிலதிபர் நாராயண மூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. 1981இல் மூர்த்தி பத்னியிலிருந்து வெளியேறியபோது இவரும் அவருடன் இணைந்து வெளியேறினார். மாதுங்காவில் இருந்த என்.எஸ்.இராகவனின் வீட்டிலிருந்து துவங்கப்பட்டதுதான் இன்போசிஸ்.

மார்ச்,2002 விலிருந்து ஏப்ரல்,2007 வரை, நாராயணமூர்த்தி விலகியபிறகு, இன்போசிசின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் மேலாண் இயக்குனராகவும் பணியாற்றினார். 2007 இலிருந்து ஜூன், 2009இல் அரசுப்பணியில் நியமிக்கப்படும்வரை இந்நிறுவனத்தின் உடன்தலைவராக இருந்தார்.

[தொகு] இணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. "Nandan M. Nilekani Profile". போர்பசு வலைத்தளம். பார்த்த நாள் 2009-06-28.
  2. Infosys Technologies Limited (2007-06-22). "About Infosys | Management Profiles | Nandan M. Nilekani". Infosys. பார்த்த நாள் 2009-06-28.
"http://ta.wikipedia.org/w/index.php?title=நந்தன்_நிலெக்கணி&oldid=864731" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்