நவம்பர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
நவம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 306வது நாளாகும். நெட்டாண்டுகளில் 307வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1570 - வட கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஒல்லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்தனர்.
- 1834 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.
- 1868 - நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.
- 1889 - வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.
- 1899 - தென்னாபிரிக்காவில் போவர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகுதியை 188 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.
- 1914 - ரஷ்யா ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.
- 1917 - பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
- 1930 - ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான்.
- 1936 - இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்-பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான்.
- 1936 - பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.
- 1936 - கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
- 1953 - பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1963 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
- 1974 - தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
- 2006 - ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2007 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1795 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத் தலைவர் (இ. 1849)
- 1815 - ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், (இ. 1864).
- 1965 - ஷாருக்கான், இந்தி நடிகர்
இறப்புகள் [தொகு]
- 1903 - பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870).
- 1917 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் (பி. 1858).
- 1950 - ஜோர்ஜ் பேர்னாட் ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1856).
- 1966 - பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)
- 1978 - ஏ. பெரியதம்பிப்பிள்ளை, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழறிஞர்
- 2007 - சு. ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)
சிறப்பு நாள் [தொகு]
- மொரீசியஸ் - இந்தியர்கள் வருகை நாள் (1834)
- கல்லறை திருநாள்