அக்டோபர் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 13 கிரிகோரியன் ஆண்டின் 286வது நாளாகும். நெட்டாண்டுகளில் 287வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 54 - ரோமப் பேரரசன் குளோடியஸ் அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதினால் அவளது மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.
- 1492 - கொலம்பசும் அவரது குழுவினரும் பஹாமாசில் தரையிறங்கினர்.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
- 1792 - வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டிசியில் இடப்பட்டது.
- 1884 - அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
- 1885 - ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1917 - யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
- 1923 - துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: புதிய இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத் படைகளால் கைப்பற்றப்பட்டது.
- 1953 - இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்கா துறந்தார்.
- 1972 - மொஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 - உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அண்டீஸ் மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
- 1976 - பொலீவியாவைச் சேர்ந்த போயிங் சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.
- 1990 - சிரியப் படைகள் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
பிறப்புக்கள் [தொகு]
- 1911 - அசோக் குமார், இந்திய நடிகர், (இ. 2001)
- 1925 - மார்கரட் தாட்சர், இங்கிலாந்து முன்னாள் பிரதம மந்திரி
- 1925 - லென்னி புரூஸ், அமெரிக்க நகைச்சுவை நடிகர் (பி. 1966)
- 1977 - பால் பியர்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
- 1978 - ஜெர்மெயின் ஓனீல், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
- 1982 - இயன் தோப், ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்
இறப்புகள் [தொகு]
- 54 - குளோடியஸ், ரோமப் பேரரசன் (பி. கிமு 10)
- 1987 - கிஷோர் குமார், இந்தி பின்னணிப் பாடகரும், நடிகரும், (பி. 1929)
சிறப்பு நாள் [தொகு]
இயற்கைப் பேரிடர் குறைப்பிற்கான அனைத்துலக நாள்