மார்கரெட் தாட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரோனஸ் தாட்சர்
Margaret Thatcher.png
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
In office
4 மே 1979 – 28 நவம்பர் 1990
Monarch இரண்டாம் எலிசபெத்
Deputy வில்லியம் வைட்லா
ஜெப்ரி ஹோவி
Preceded by ஜேம்ஸ் காலகன்
Succeeded by ஜான் மேஜர்
எதிர் கட்சி தலைவர்
In office
11 பெப்ரவரி 1975 – 4 மே 1979
Monarch இரண்டாம் எலிசபெத்
Prime Minister ஹரோல்டு வில்சன்
ஜேம்ஸ் காலகன்
Preceded by எட்வர்டு ஹீத்
Succeeded by ஜேம்ஸ் காலகன்
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர்
In office
11 பெப்ரவரி 1975 – 28 நவம்பர் 1990
Preceded by எட்வர்டு ஹீத்
Succeeded by ஜான் மேஜர்
கல்வி மற்றும் அறிவியல்
In office
20 ஜூன் 1970 – 4 மார்ச் 1974
Prime Minister எட்வர்டு ஹீத்
Preceded by எட்வர்டு ஷார்ட்
Succeeded by ரெகினால்டு பிரென்டிஸ்
பின்சிலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
In office
8 அக்டோபர் 1959 – 9 ஏப்ரல் 1992
Preceded by ஜான் குரோடர்
Succeeded by ஹார்ட்லி பூத்

பிறப்பு அக்டோபர் 13, 1925(1925-10-13)
கிரான்தம், லின்கோல்ன்சரையர்,
ஐக்கிய இராச்சியம்
இறப்பு 8 ஏப்ரல் 2013
இலண்டன்
ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சி கன்சர்வேட்டிவ் கட்சி
Spouse(s) டெனிஸ் தாட்சர்
(1951–2003)
குழந்தை கரோல் தாட்சர்
மாற்கு தாட்சர்
Residence செஸ்டர் சதுக்கம்
Alma mater சோமர்வில் கல்லூரி, ஆக்சுபோர்டு
இன்ஸ் ஆப் கோர்ட்
Profession வேதியியல்
வழக்கறிஞர்
Religion இங்கிலாந்து திருச்சபை
(1951-)[1]
மெதடிசம்(1925-1951)
மார்கரெட் தாட்சர்

மார்கரெட் ஹில்டா தாட்சர்[தொகு]

மார்கரெட் ஹில்டா தாட்சர் (Margaret Hilda Thatcher, Baroness Thatcher, 13 அக்டோபர் 1925 – 8 ஏப்ரல் 2013) பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய பிரித்தானிய பிரதமராக 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார்.[2] 1975 முதல் 1990 வரை தமது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகப் பணியாற்றி உள்ளார். சோவியத் இதழாளர் ஒருவரால் தாட்சரின் சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்[3][4]; அதுவே அவரது விடாநிலை அரசியலையும் தலைமைப் பண்பையும் குறிக்கின்ற அடைபெயராக பிரித்தானிய வலதுசாரிகளாலும் அழைக்கப்படலாயிற்று.[5] இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சரிசம் என அழைக்கப்படலாயிற்று.

வேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட்பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார். 1959ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக பின்ச்லே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் எட்வர்டு ஹீத் தலைமையேற்ற அரசில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1975ஆம் ஆண்டில் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஹீத்தை தோற்கடித்து பிரித்தானிய எதிர்கட்சித் தலைவரானார். 1979ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார்.

1970-களில் உலகின் பல்வேறு முதலாளித்துவ நாடுகள் பிரிட்டன் உட்பட கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தாட்சர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் வீழ்ந்துவரும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பல அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.[6] பதவியேற்றவுடன் ஆற்றிய உரையில் தனது கொள்கைகள் என்னவென்பதை பிரகடனப்படுத்தினார். அவரது அரசியல் கொள்கையும் பொருளியல் கொள்கைகளும் விதி களைவு (முக்கியமாக நிதித்துறையில்), நெகிழ்வான தொழிலாளர் சந்தைகள், அரசுத்துறையைத் தனியார்மயமாக்கல், தொழிற்சங்கங்களின் வலிமை மற்றும் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்துவனவாக இருந்தன. துவக்கத்தில் இவரது கொள்கைகளால் மிகவும் புகழ் பெற்றார்; பின்னர் நாட்டின் பொருளியல் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் புகழ் மங்கியது. 1982இல் இவர் பாக்லாந்து போரில் பெற்ற வெற்றி மற்றும் பொருளாதார மீட்சி இவருக்கு மீண்டும் ஆதரவைப் பெருக்கியது. இதனால் 1983ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

தாட்சரிசம்[தொகு]

பணக்காரர்களை பலவீனப்படுத்தி தொழிலாளர்களை வாழ வைக்க முடியாது என்பது அதில் ஒன்று. பலமானவர்களை பலவீனப்படுத்துவதன் மூலம் பலவீனர்களை பலப்படுத்திவிட முடியாது என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டினார். 1979ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி எனப்படும் பழமைவாதக் கட்சியின் சார்பில் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 1990ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்கள் நலத்திட்டங்களுக்கு வேட்டு வைத்ததுதான் அவர் செய்த முதல் சாதனையாகும்.

தொழிலாளர்களுக்கு‍ எதிரான கொள்கை[தொகு]

ஓய்வூதியம் உட்பட தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகளை அவர் பறித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் முனைப்பு காட்டினார். அவர் பொறுப்புக்கு வந்த பொழுது பிரிட்டனின் பணவீக்க விகிதம் 27 சதவிகிதமாக இருந்தது. இதைச் சமாளிக்க அவர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பாதையைப் பின்பற்றினார். பிரிட்டனில் 130 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டியுசி எனும் தொழிற்சங்கத்தை முடக்கினார். தொழிற்சங்க உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் மூலம் சந்தா பிடித்து தரப்படாது என்று திருத்தம் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் பிரிட்டனின் வரலாறு காணாத சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது.

சுரங்க தொழிலாளர் சங்கத்தின் தலைவரான ஆர்தர் ஸ்கர்ட்கல் என்பவரை கைது செய்து சிறையிலடைத் தார். அவர் சோவியத் ஏஜெண்ட் என்று பொய்க்குற்றச்சாட்டை சுமத்தினார். பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவிலிருந்து மலிவு விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்யலாம் என்று அவர் முதலாளிகளுக்கு வழிகாட்டினார். தாட்சர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் என்பது பொதுவாக நவீன தாராளமயமாக்கல் பாதைக்கு வழிவகுத்தது.

1987இல் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் அவர் விதித்த கம்யூனிட்டி சார்ஜ் என்ற வரி மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அமைச்சரவையில் அவரது ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்துக்களும் ஏற்கப்பட வில்லை. இதனையடுத்து 1990இல் நவம்பர் மாதம் தமது பதவியிலிருந்து விலகினார். இவருக்கு வாழ்நாள் முழுமையும் பிரபுக்கள் அவையில் அங்கத்தினாராக செயல்பட ஏதுவாக லின்கன்சையர் கவுன்டியின் கெஸ்டவென் தொகுதியின் பரோனசாக அரசப்பதவி வழங்கப்பட்டது.

பொதுத்துறையை தனியார்மயமாக்குவது தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வது சமூக நலத்திட்டங்களை வெட்டுவது என்பது‍ தான் தாட்சர் பின்பற்றிய கொள்கை...


மேற்கோள்கள்[தொகு]

  1. Thatcher 1995, p. 150
  2. http://dinamani.com/latest_news/article1536313.ece தினமணி
  3. Speech at Kensington Town Hall ("Britain Awake") (The Iron Lady), Margaret Thatcher Foundation archives
  4. "Why was Margaret Thatcher called the Iron Lady?". http://wiki.answers.com.+பார்த்த நாள் ஏப்ரல் 10, 2013.
  5. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130408_tatcherdies.shtml இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார் பிபிசி தமிழ்
  6. Thatcher, Margaret (1979). "Conservative Party Manifesto 1979". Foreword. conservativemanifesto.com. பார்த்த நாள் 28 July 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:

"http://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_தாட்சர்&oldid=1511641" இருந்து மீள்விக்கப்பட்டது