செப்டம்பர் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 273வது நாளாகும். நெட்டாண்டுகளில் 274வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1399 - நான்காம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1744 - பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தனர்.
- 1791 - மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது.
- 1840 - நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
- 1860 – பிரித்தானியாவின் முதலாவது அமிழ் தண்டூர்தி (tram) சேவை ஆரம்பமானது.
- 1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
- 1882 - உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
- 1888 - கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.
- 1895 - மடகஸ்கார் பிரெஞ்சு பாதுகாக்கப்பட்ட அரசாக அறிவிக்கப்பட்டது.
- 1901 - ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1935 – அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையே ஊவர் அணை திறக்கப்பட்டது.
- 1938 - செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன.
- 1938 – "பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்" நடத்தப்படுவது நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.
- 1945 - இங்கிலாந்தில் தொடருந்து விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
- 1947 - பாகிஸ்தான், யேமன் ஐநாவில் இணைந்தன.
- 1949 - சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.
- 1965 - இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
- 1966 - "பெக்குவானாலாந்து" பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானாக் குடியரசு ஆகியது.
- 1967 - இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1993 - இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லட்டூர் மற்றும் ஒஸ்மனாபாத் நகரங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 2001 - இந்தியக் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
- 2003 - தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
- 2007 - இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- 2004 - காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (பி. 1936)
- 2008 - ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)
சிறப்பு நாள் [தொகு]
- பொட்சுவானா - விடுதலை நாள் (1966)