செப்டம்பர் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 260வது நாளாகும். நெட்டாண்டுகளில் 261வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 105 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1630 - மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
- 1631 - ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.
- 1787 - ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
- 1789 - வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
- 1809 - பின்லாந்து போரில் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து ரஷ்யாவிடம் கையளிக்கப்பட்டது.
- 1858 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் கொல்லப்பட்டனர்.
- 1908 - ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த "தொமஸ் செல்ஃபிரிட்ஜ்" என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
- 1928 - சூறாவளி தென்கிழக்கு புளோறிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
- 1929 - லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.
- 1939 - சோவியத் ஒன்றியம் போலந்தின் மீது படையெடுத்து கிழக்குப் பகுதியைப் பிடித்தது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று ஜெர்மனியரால் தாக்கி அழிக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்யாவின் பிறயான்ஸ்க் நகரம் நாசிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1949 - டொரோண்டோ துறைமுகத்தில் கனேடியக் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
- 1956 - ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.
- 1974 – வங்காள தேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1976 - நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.
- 1978 - இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- 1980 - போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
- 1980 - நிக்கராகுவாவின் முன்னாள் அதிபர் அனாஸ்டாசியோ சொமோசா டெபாயில் பராகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1991 - லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
- 1993 - கடைசி ரஷ்யப் படை போலந்தில் இருந்து வெளியேறியது.
- 1997 - பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 2004 - இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1879 - ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (இ. 1973)
- 1897 - வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது ஜனாதிபதி (இ. 1981)
- 1989 - வ. ரா., மணிக்கொடி எழுத்தாளர்
- 1906 - ஜே. ஆர். ஜெயவர்த்தனா, இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி, (இ. 1996)
- 1930 – லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (இ. 2013)
- 1944 - ரைன் மெஸ்னர், இத்தாலிய மலையேறுநர்
- 1950 - நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதி
- 1974 - ரஷீத் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1665 - நான்காம் பிலிப், ஸ்பெயின், போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1605)
- 1948 – ரூத் பெனடிக்ட், அமெரிக்க மனிதவியலாளர் (பி. 1887)
- 1959 - கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1911)
- 1953 - திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)
- 1979 - எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)
- 1994 – கார்ல் பொப்பர், ஆஸ்திரிய மெய்யியலாளர், (பி. 1902)
சிறப்பு நாள் [தொகு]
- அங்கோலா - தேசிய வீரர்கள் நாள்