பெப்ரவரி 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | பெப்ரவரி 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | |||
| MMXII | ||||||
பெப்ரவரி 29 கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன.
பெப்ரவரி 29 வரும் ஒரு ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. இந்த நாள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான ஆண்டுகளில் மட்டுமே (எடுத்துக்காட்டு: 2000, 2004, 2008 என்பன) வருகிறது. எனினும், நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளான 1900, 2100 போன்றவை நெட்டாண்டுகளல்ல.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1704 - பிரெஞ்சுப் படைகளும் ஐக்கிய அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர்கள் கொல்லப்பட்டனர்.
- 1712 - சுவீடனில் சுவீடன் நாட்காட்டியில் இருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1940 - பின்லாந்து குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி முயற்சிகளில் இறங்கியது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகள் ஐக்கிய அமெரிக்காவினால் முற்றுகைக்குள்ளாகியது.
- 1960 - மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1972 - வியட்நாம் போர்: தென் கொரியா தனது மொத்தமுள்ள 48,000 படையினரில் 11,000 பேரை வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
- 1988 - தென்னாபிரிக்காவின் ஆயர் டெஸ்மண்ட் டூட்டு உட்பட 100 மதகுருமார் கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.
- 1996 - பெரு விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1896 - மொரார்ஜி தேசாய், இந்தியப் பிரதமர் (இ. 1995)
- 1904 - ருக்மிணி தேவி அருண்டேல், பரத நாட்டியக் கலைஞர். (இ. 1986)