மே 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 23 கிரிகோரியன் ஆண்டின் 143ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 144ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1430 - ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.
- 1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
- 1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத தன்னை அறிவித்தார்.
- 1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
- 1865 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
- 1915 - முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
- 1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது.
- 1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
- 1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
- 1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
- 1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
பிறப்புகள் [தொகு]
- 1920 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)
- 1951 - அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.
- 1707 - கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)
இறப்புகள் [தொகு]
- 1906 - ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)
- 1997 - அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
- 1981 - உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் (பி. 1899)
சிறப்பு நாள் [தொகு]
- World Turtle Day