1828
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
| ஆண்டுகள்: | 1825 1826 1827 - 1828 - 1829 1830 1831 |
| 1828 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1828 MDCCCXXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1859 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2581 |
| சீன நாட்காட்டி | 4524-4525 |
| எபிரேய நாட்காட்டி | 5587-5588 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1883-1884 1750-1751 4929-4930 |
| இரானிய நாட்காட்டி | 1206-1207 |
| இசுலாமிய நாட்காட்டி | 1243 – 1244 |
| ரூனிக் நாட்காட்டி | 2078
|
ஆண்டு 1828 (MDCCCXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 22 – பேர்சியாவிடம் இருந்து கிழக்கு ஆர்மீனியாவை உருசியா கைப்பற்றியது.
- ஏப்ரல் 14 - நோவா வெப்ஸ்டர் தனது அகரமுதலியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
- ஏப்ரல் 26 – பிரேசிலும் டென்மார்க்கும் தூதரக உறவை ஏற்படுத்தின.
- சூன் 3 - சிமோன் பொலிவார் பெரு மீது போரை அறிவித்தார்.
- சூன் 23 – போர்த்துக்கல்: இரண்டாம் மரீயா அரசி தனது மாமன் முதலாம் மிகுவெல் அரசனினால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
- ஆகத்து 27 – உருகுவேயின் விடுதலையை பிரேசில், அர்ச்செண்டினா நாடுகள் அங்கீகரித்தன. சிமோன் பொலிவார் பெர்ம் கொலம்பியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்தார்.
- ஆகத்து 27 - உருசியப்படை "அக்கால்சிக்" என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.
- செப்டம்பர் 29 – வர்னா (இன்றைய பல்கேரியாவில்) நகரை உருசிய இராணுவத்தினர் துருக்கியரிடம் இருந்து கைப்பற்றினர்.
தேதி அறியப்படாதவை [தொகு]
- உலகின் முதலாவது மின் விசைப்பொறியை ஆனியோசு ஜெட்லிக் என்பவர் உருவாக்கினார்.
- சப்பானில் கியூசூ நகரில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் இறந்தனர்.
- பிரேசில், ரியோ டி ஜெனய்ரோ நகரில் 32,000 அங்கோலியர்கள் விற்கப்பட்டனர்.
- யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- மே 8 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)