ஜூன் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டின் 179ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 180ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1389 - ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.
- 1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.
- 1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
- 1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான்.
- 1880 - அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.
- 1881 - ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.
- 1904 - "நோர்ஜ்" என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
- 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
- 1919 - முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
- 1922 - ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1940 - சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.
- 1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
- 1964 - மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.
- 1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1994 - ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.
- 1995 - மண்டைதீவுத் தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
- 2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.
பிறப்புகள்[தொகு]
- 1703 - ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)
- 1907 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)
- 1921 - பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)
- 1937 - எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995
- 1940 - முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.
இறப்புகள்[தொகு]
- 1836 - ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)
- 1914 - பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)